கிண்ணியா நகர் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்றி, இன்றும் (18) வெறிச்சோடிக் காணப்பட்டன. கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்பை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
Author: ஆசிரியர்
மேலும் 332 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 332 பேர் இன்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 53408ஆக உயர்ந்துள்ளது.
கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமை
கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு இன்று(18) கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், சிறுவர் மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் நாகொட பிரதேசத்திலுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், இராஜாங்க அமைச்சரின் அலுவலக சபையினர் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மண்டைதீவில் போராட்டம்
20 பொலிஸாருக்குக் கொரோனா
ரத்தொழுகம, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் 20 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பிரதேசங்களைச் சேர்ந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்தொழுகம பொலிஸில் 15 பொலிஸாருக்கும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 5 பொலிஸாருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குறித்த இரு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா
கொக்கல சுதந்திர வர்த்தக வலையத்தில் 6 நாள்களில் 54 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்குள்ள 3 ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் கைமாறின
கிழக்கு மாகாணத்தில் தலைவர்களின் அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள், அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்கள்
உழவுக்கு வந்தனம் செய்வோம்!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?
விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்.