தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22) அறிமுகம் செய்தார்.

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தல் மனுக்கள்: அதிரடி தீர்ப்பு வெளியானது

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைத்ததன் ஊடாக, தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டது என உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.

’கேமி’ க்கு 50 பேர் பலி; ஏராளமானோர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட சூறாவளியில் 50 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. சூறாவளியின் எதிரொலியாக, கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய படகு சேவையில் மாற்றம்

போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் முதல் மருத்துவமனை

இந்திய இராணுவமும், விமானப்படையும் இணைந்து பரசூட் மூலம் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் தற்காலிக மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு மைல்கல் சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டியுள்ளது.

ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் 51 கிமீ (32 மைல்) ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) நேற்று (17) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் சகஜ நிலை திரும்பியதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின்  அனைவரும் தயாராக  இருக்கிறோம். இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன.  இது தொடர்பான விடயங்கள்  பாராளுமன்றத்தில் கூட   சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவேன் – அநுர

தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.