உல்லாசமாக இருந்த எட்டு பேர் கைது

உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில்  எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர். இச்சம்பவம், காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.

உயிர் தப்பிக்க ஆற்றில் குதித்த தந்தை மாயம்: மகன் தப்பினார்

காட்டு பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் அவருடைய 14 வயது மகனும் காட்டு யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பியோடி ஆற்றில் குதித்துள்ளனர்.

2025 இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பிணைக்கு இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது

மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ​பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்​கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் களுவாஞ்சிகுடி நீதவானின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. 

‘தூய்மையான இலங்கை’க்கு எதிராக ​பணிப்புறக்கணிப்பு?

தனியார் பேரூந்துகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தி, அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டத்தின் கீழ் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக தனியார் பஸ் சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் தெரிவித்தன.

தேயிலை கூடையுடன் குடை

தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை,  நடவடிக்கை எடுத்துள்ளது.

5 மாணவர்கள் படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்…

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னால்  வியாழக்கிழமை  (02) மாலை இடம்பெற்றது.

கடந்த ஆண்டில் அதிகளவான வரி வருமானம்

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் 1.56 ரில்லியன் ரூபா வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் 1.95 ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் வருமான வரியாக 112.1 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் வற் வரியினுடாக 245.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புதிய வைரஸ் குறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.