நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
Author: ஆசிரியர்
70 ஆண்டுகளில் நேர்ந்த கொடூரம்: மன்னிப்பு கோரிய பிரதமர்
21/4 தாக்குதல் ; பிள்ளையானுக்கு CID அழைப்பு
சின்னம் தமிழ்த் தேசியத்துக்கா?
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 3)
(தோழர் ஜேம்ஸ்)
யுத்தம முடிவுற்ற 2009 மே மாதத்தற்கு பின்னரான தேர்தல் அரசியலில் தற்போது அமைந்திருக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியம் கூட்டமைப்பு(உண்மையில் இந்த கூட்டமைப்பு ஏற்கனவே வரதராஜப்பெருமாள், சுரேஸ் பிரேமசந்திரன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றவர்கள் சார்ந்த கட்சிகளின் இணைப்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்க தமிழரசுக் கட்சியின் புலிகளின் தொடர்ச்சியாக தொடர்ந்த கட்சியிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது) அமைப்பை முன்னாள் விடுதலை போராளிகளால் சரியான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டிருக்கு வேண்டும்.
வாக்காளர் அட்டையின்றி இம்முறை வாக்களிக்கலாம்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால், வாக்களிக்கும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்
வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்
சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
மூவின தீபாவளி கொண்டாட்டம் நாளை
மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு
நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை?
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.