சீரற்ற காலநிலையால் 12,114 பேர் பாதிப்பு

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 1ஆம் திகதி முதல் இதுவரையான கால பகுதியில், மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் இதில் முதன்மையாக உள்ளது

பாகிஸ்தானில் கட்டாய ’முடக்கம்’ அமுல்

பாகிஸ்தானில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2,000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால், நவம்பர் 17ஆம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், பல்வேறு நகரங்களில் கட்டாய ‘Lockdown’ அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் அதிகாரி நியமனம்

தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் தலைமை அதிகாரியாக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். அத்துடன், ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவித்துள்ளார். 

அரிசி விற்கும் இடங்களில் தீவிர சோதனை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 2,800க்கும் மேற்பட்ட அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, அதன் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 425 இடங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்

ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

முருகன், நளினியுடன் சிவாஜிலிங்கம் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், நளினி ஆகியோரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  வியாழக்கிழமை (07)  நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  சுகாதார சீர்கேடுகள் உடன் பொது மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு பேக்கிரிகள்(வெதுப்பகங்களுக்கு) நீதிமன்ற உத்தரவு பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் வெள்ளிக்கிழமை (8)சீல் வைத்துள்ளனர்.

1000 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது

குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி,   கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 2)


(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னராக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் வழித்தோன்றல்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே தமது அரசியல் வெற்றிக்கான மூலதனமாக பாவித்து வந்தனர்…. வருகின்றனர்…