முருகன், நளினியுடன் சிவாஜிலிங்கம் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், நளினி ஆகியோரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  வியாழக்கிழமை (07)  நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  சுகாதார சீர்கேடுகள் உடன் பொது மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு பேக்கிரிகள்(வெதுப்பகங்களுக்கு) நீதிமன்ற உத்தரவு பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் வெள்ளிக்கிழமை (8)சீல் வைத்துள்ளனர்.

1000 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது

குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி,   கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 2)


(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னராக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் வழித்தோன்றல்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே தமது அரசியல் வெற்றிக்கான மூலதனமாக பாவித்து வந்தனர்…. வருகின்றனர்…

’லயன் குடியிருப்புகளை கையகப்படுத்த முடியாது’

” தோட்டத் தொழிலாளர்கள் இரு வாரங்கள் வேலைக்கு வராவிட்டால் தோட்ட குடியிருப்புகளை கையகப்படுத்தும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். 

ட்ரம்பின் முதல் உரையாடல் மோடியுடன்

உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்  47வது ஜனாதிபதியாக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

பாம்பன் ரயில் பாலம் 20க்குள் திறக்கப்படும்?

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம், 20ஆம் திகதிக்குள் திறக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.  இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே 545 கோடி ரூபாயில் சுமார் 2 கிலோமீற்றர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: ‘எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’ – ரஷ்யா

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என,  ரஷ்யா தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில்,  “அடுத்த அமெரிக்க ஜனாதிபதி, அவர் யாராக இருந்தாலும், சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதும், அமெரிக்க கடற்கரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சாகசங்களைத் தேடாமல் இருப்பதும் தர்க்கரீதியானதாக இருக்கும். 

வாய்ப் பேச்சு பேசும் வீரர்கள் அல்ல சூரர்களாம்

(முருகானந்தம் தவம்)

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்வரும் 
நவம்பர் 14ஆம் திகதி  10ஆவது பாராளுமன்றத்திற்கான  தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் இந்த  பாராளுமன்றத் தேர்தலை   எதிர்கொள்ள 9ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் தாமும் ஒரு எம்.பியாகி விட வேண்டுமென விரும்புவோரும் தயாராகி வருகின்றனர்.