திரு நாகமுத்து சிவநாதன்
(சிவம்)
அன்னை மடியில் : 21 யூலை 1954 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2016
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவநாதன் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
Author: ஆசிரியர்
மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு
தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.
(“மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை!
இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(“இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை!” தொடர்ந்து வாசிக்க…)
ஜெனீவாவில் புலம்பெயர் புலி அமைப்புகள் நடத்தும் துப்புக்கெட்ட அரசியலின் 10 பலன்கள்
1. சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள்.
2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள் முடக்கினார்கள்.
3. நாட்டில் தமது முகவர்களை இனம் கண்டு அவர்கள் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்தனர்.
4. அமெரிக்காவின் கைப்பொம்மை அரசான ரனில்-மைத்திரி பேரினவாத அரசை நிறுவ உதவினர்.
5. ஜெனீவா முன்றலில் போராட்டம் என்ற பெயரில் ‘எமது நாடு தமிழீழம்இ எமது தலைவர் பிரபாகரன்’ என்று மட்டும் முழக்கமிட்டு உலக மக்களின் பார்வையிலிருந்து ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்தினர்.
6. கடந்த எழு வருடங்களாக ஜெனீவாவைக் காரணமாக முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் முடக்கினர்.
7. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் உலகம் முழுவதும் அழிவுகளை நடத்தும் அமெரிக்காவிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் போர்க்குற்றத்தைத் தண்டிக்குமாறும் கோரிக்கை விடுத்துஇ மக்களின் தியாக உணர்வை கொச்சைப்படுத்தினர்.
8. அமெரிக்க அரசு இலங்கை அரசை வழி நடத்தஇ அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டு இலங்கை அரசின் மறைமுக ஆதரவாளர்களாயினர்.
9. உலகின் அழிக்கப்பட்ட போராட்ட அமைப்புக்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை மீளமைத்துக்கொண்ட படிப்பினைகளை எல்லாம் நிராகரித்து அமெரிக்கஇ இந்திய அரசுகளின் அடியாள் படைகளாகச் செயற்பட்டனர்ஃ
10. தமது உள்ளூர் பினாமிகள் ஊடாக இன்றும் அமெரிக்காவையும் அதன் அடிமை நிறுவனமான ஐ.நாவையும் இன்னும் நம்புமாறு உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24):
(ஐயர்)
பிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.
இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 4)
மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது. அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.
(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)
புளொட் தோழர் சின்ன மென்டிஸ்
இவர் யாழ் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் எமது ஊரின் ஒரு பகுதியான வேரக்காடு என்னும் பகுதியில் புளொட் உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்துவந்தனர்.இதை அண்மித்த பகுதியில் இரண்டு சிறு குளங்களும் உன்னிய வயல்வெளி என்னும் பகுதியும் உண்டு. ஒரு நாள் பயிற்சி அளிக்கும்போது இரண்டு உறுப்பினர்கள் பெரியகுளத்தில் தாண்டு மூச்சுத் திணறி மரணமானார்கள்.இவர்கள் புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி என அழைக்கப்படும் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இவரகளின் மரணம் தொடர்பாக சின்னமெண்டிஸ் சந்தேகம் கொண்டார்.ஏனெனில் அந்தக் குளம் ஆழமற்றது.அதனால் அவர் சந்தேகம் கொண்டார்.பின்னர் இறந்தவர்களின் பின்புலம்,பயிற்சி அளித்தவரகளின் பின்புலம் என்பவற்றை ஆராய்ந்தார்.
இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!சிங்களவர் அல்ல (பாகம் 2)
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.
(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!சிங்களவர் அல்ல (பாகம் 2)” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 48 )
தம்பலகாமத்தில் சிறிபாலாவின் அடவடித்தனத்தை பற்குணம் அடக்கியதால் தமிழர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருந்தது.எந்த வகையான விளையாட்டும் அவர் தயாரானவர் என்பதால் பணம்,அரசியல்,சண்டித்தனம் எதுவுமே அவரிடம் எடுபடாமல் போய்விட்டது. ஆனால் பற்குணம் சிறிபாலாவின் அடாவடித்தனத்தை தனக்குள்ளேயே மீளாய்வு செய்தார்.எவ்வளவு தமிழர்கள் அங்கே இருந்தும் சிறிபாலா சிங்களவர் என்ற ஒரே காரணத்தால் பயந்து நின்றனர்.எனவே இந்த நிலையை மாற்ற முடிவு செய்தார்.
தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [5]
நாபா, தேவா இருவர் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்த ஸ்டாலின் அண்ணா, இடைப்பட்டகாலத்தில் ஏற்ப்பட்ட தடுமாற்றங்கள் பற்றிய மன உளைச்சலில் இருந்தார். அவரை பொறுத்தவரை நாபா, தேவா இருவரையும் தன் இரு கண்களாகவே கருதினார். நாபாவின் அரசியல் அணுகுமுறை, தேவாவின் களைப்பற்ற கடின உழைப்பு, அண்ணாவின் மனதில் இருவருக்கும் சம ஸ்தானத்தையே கொடுத்திருந்தது. தாயகத்தில் ஏற்ப்பட்ட சலசலப்பை கலந்து பேசித் தீர்க்கலாம் என அண்ணா நம்பினார். அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் வேளையில், இடையில் இருந்தவர் செயலால் அது தடைபட்டு கொண்டே சென்றது. அண்ணாவின் தலைமையில் அந்த முன்னெடுப்பு நடந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால் இடைசெருகல்களின் செயலால் சுமுகமாக தீர்க்க வேண்டிய விடயம், சிண்டு முடியப்பட்டு பெரும் சிக்கலாக மாறியது.
(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [5]” தொடர்ந்து வாசிக்க…)