புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

தமிழர் உணவு பார்த்தலே நாவூறுகிறது! புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

 

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.

(“புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

13ஐ ஆதரித்ததால் மூன்று தடவைகள் சுட்டப்பட்டார் வட மாகாண ஆளுனர்!

தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கு தான் பல தியாகங்களை செய்துள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, எதிர் தரப்பிலிருந்து 13ஆம் திருத்தச்சடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமையினால் தன் மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த சம்பவங்களிலிருந்து தான் தப்பியதாகவும் கூறினார். அத்துடன் வடக்கில் சகல அவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும், இதற்கான ஒப்பந்தங்கள் வடபகுதியிலுள்ளவர்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறினார். தனது அரசியல் வாழ்வின் இறுதி தருணங்களை வடபகுதி மக்களுடன் கழிக்க வேண்டும் என்று உறுதிகொண்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

மனநோய்!?

உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின் கடைசியிற்தான் சொல்லப்போகிறேன். அதற்கு முன்பாக சில விஷயங்கள். உலகம் முழுவதும் இன்று இளையோரைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானதாக, ‘டிப்பிறசன்’ என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோய் பெருகி வருகிறது. ஒழுக்கயீனம், அன்பின்மை, பேரதிர்வு, பெரும்மனச்சுமை போன்ற பல காரணங்களால், இந்நோய் உருவாகுவதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது.

(“மனநோய்!?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில், மலையக மக்களுக்கான தனியான அலகும், தனி அடையாளமும் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது. இந்த அமர்வின் போதே மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் சுமார் 45 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அரசியல் தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை பெருந்தோட்ட துறையை சார்ந்த ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.

(“அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

‘சிங்க லே’ உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தம்!

சிங்க லே என்று கூச்சலிடுபவர்களின் உடம்பில் ஒடுவது கலப்பு இரத்தம் என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபையின் புதிய ஆளுனராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான வரவேற்புநிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலப்பு இரத்தம் கொண்டவர்கள் என்று கூறினார். சிங்க லே என்று கூறுவோரின் உடம்பில் கலப்பு இரத்தம் ஓடுவதாகவும் யாரும் ஒரு இன, ஜாதி, நாட்டு இரத்தத்துடன் இருப்பதில்லை என்றும் கூறினார். இந்தியாவிலிருந்து அரசி கொண்டு வருகின்றோம், தாய்வானிலிருந்து கருவாடு கொண்டு வருகின்றோம். அப்படி பார்த்தால் எமது உடம்பில் ஓடுவது சர்வதேச கலப்பு இரத்தமாகும் என்றும் கூறினார். ரெஜினால்ட் குரே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராகவும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் டிவியில்…… அ.வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல் – ஆதவன் டிவியில்….
20.02.2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி (பிரித்தானிய நேரம் )
www.ayhavantv.com

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள். இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!

இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது.

(“ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!” தொடர்ந்து வாசிக்க…)

கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர்?

கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முறன்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன. கடந்த வார வடக்கு மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்ட ஆளும் கட்சி (தமிழரசுக்கட்சி) உறுப்பினர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபையை முடக்குமளவுக்கு செயற்பட்டிருந்தனர். உண்மையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியா? ? ஆல்லது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்குச் செல்வதற்கு முன் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தன்னுடைய கட்சிக்காரர்களாலேயே கேள்விக்கு மேல் கேள்வி கேட்குமளவுக்கு இப்போது அப்படி என்ன நிகழ்ந்து விட்டது என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்போமானால் மிகுதி கேள்விகள் யாவற்றுக்கும் இலகுவில் விடைகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?

(“கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர்?” தொடர்ந்து வாசிக்க…)