அதிமுக ஆட்சி அமைவதற்கு பெரிதும் உதவிய தொகுதிகள் :-

24,383 ஓட்டுகள் தான் இந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமாக. அமைந்துவிட்டது…..

1) ராதாபுரம் – 49
2) கோவில்பட்டி – 428
3) கரூர் – 441
4) தென்காசி – 464
5) ஒட்டப்பிடாரம் – 493
6) பெரம்பூர் – 579
7) திருப்போரூர் – 950
8) பர்கூர் – 963
9) பேராவூரணி – 964
10) கிணத்துக்கடவு – 1332
11) ஆவடி – 1395
12) அரியலூர் – 1753
13) சிதம்பரம் – 1945
14) மொடக்குறிச்சி – 2222
15) விருகம்பாக்கம் – 2333
16) ஊத்தாங்கரை – 2613
17) கெங்கவள்ளி – 2622
18) அறந்தாங்கி – 2837
——————
18 + 98 = 116 திமுக
134 – 18 = 116

தமிழகத் தேர்தல்: மக்களுடன் இடதுசாரிகள் இரண்டறக் கலக்கவில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும், திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர்கள் நிறைந்த மாநகரில் 6 கட்சிக் கூட்டணி அமைத்தும் இடதுசாரிகள் தோல்வி அடைந்திருப்பதும், வாக்கு வங்கி கடுமையாக சரிந்திருப்பதும் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. திருப்பூரில் சமீபத்தில் தொழில் அமைப்புகளுடன் கையெழுத்தான தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தவை இடதுசாரிகளின் தொழிலாளர்கள் அமைப்புகள்தான். இதன்மூலமாக, சுமார் 3 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

(“தமிழகத் தேர்தல்: மக்களுடன் இடதுசாரிகள் இரண்டறக் கலக்கவில்லையா?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு

(மொஹமட் பாதுஷா)

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பெரும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகள் பற்றியும் அரசியல் சார்ந்த அபிலாஷைகளின் நிலைப்பாடு குறித்தும் பேச வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் பற்றியே இக்கட்டுரை அதிக கவனம் செலுத்துகின்றது என்றாலும், இதிலுள்ள பல விடயங்கள் தமிழர்களுக்கும் பொதுவானவையாகும். ‘வழிபடுதலால்’ அவர்கள் வேறுபட்டாலும் வாழ்வியலில் இவ்விரு சமூகங்களினதும் பொதுவிதியாக இவ்விடயங்கள் காணப்படுகின்றன.

(“வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ்: மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பல சமயம், எதிர்பார்த்தவற்றை விட எதிர்பாராதவை சுவையானவை. எல்லாரும் எதிர்பார்க்கிறோம். நிறைவேறாத எதிர்பார்ப்பு ஒருபுறம் ஏமாற்றமாகவும் மறுபுறம் விரக்தியாகவோ, கோபமாகவோ வெளிப்படலாம். மக்களின் தீர்ப்புக்கள் பலசமயம் இவ்வாறானவையே. சிலவேளை, மக்களின் தீர்ப்புக்கள் புதிராகத் தோன்றலாம். அவற்றுட் தர்க்கத்தையோ, நியாயத்தையோ தேட இயலாமற் போகலாம். அதனால் தானோ என்னவோ, மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பென்கிறார்கள்.

(“பிலிப்பைன்ஸ்: மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

எகிப்துஎயார் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

எகிப்திய நகரமான அலெக்ஸ்‌ஸான்ட்ரியா நகரத்தின் கடற்பகுதியில் எகிப்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், காணாமல் போன எகிப்துஎயார் விமானத்தின் சிதைவுகளும் பயணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ்‌ஸான்ட்ரியா நகரத்துக்கு 290 கிலோமீற்றர் தொலைவிலேயே இன்று சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்திய இராணுவம் தெரிவித்ததாக எகிப்திய அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. 66 பயணிகளுடன் மத்தியதரைக் கடலில் மேற்படி விமானம் நேற்று காணாமல் போயிருந்தது.

புலம் பெயர் தேசத்தவரின் தமிழ் நாட்டுத் தேர்தல் பார்வை

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார் என்று நினைத்திருந்த ஒருவரை அமெரிக்காவில் சந்தித்தேன். திருச்சியிலிருந்து வந்தவர்.
“இந்தியாவிற்கு எப்போது வந்தீர்கள்” என்று கேட்டேன்
. “ மூன்று வருடமாச்சு?” என்றார்.

(“புலம் பெயர் தேசத்தவரின் தமிழ் நாட்டுத் தேர்தல் பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கை அனர்தங்களுக்கு உதவி புரிவோம்

நான் இலங்கை வந்து 82 மாதங்கள் கடந்துவிட்டது. 2009 யுத்தம் முடிவடைந்தபின் அது விட்டுச்சென்ற காயங்கள் இன்னும் முற்றாக மாறவில்லை. பல நெஞ்சங்களில் வடுக்களாகிவிட்டன. 82 மாதங்களிலும் பார்த்த சந்தித்த மக்கள் கூறிய விடயங்களினால் என் மனம் மரத்துப்போய்விட்டது. ஆதலால் யாராவது தமது சிறுபிரச்சனைகள் கூறினால் ஆறுதல் சொல்வதோடு விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் மனம் மரத்துவிட்டது. கடந்த 3 நாட்களாக மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டபின் மனம் ஒரு இடத்தில் இல்லை. வடக்கில் நடந்தது யுத்தம். வட்டுக்கோட்டை தமிழீழ தீர்மானம் எடுத்தவுடன் எனது தந்தையும் மாமனாரும் எனது ஊர் இளைஞர்களிற்கு இத்தீர்மானம் எமது அடுத்த சந்ததியினை ஒன்றுக்கும் உருப்படாமலும் எமது மக்கள் சிதறி தமது அடையாளங்கள் தெரியாமல் கோவணம் இன்றி நடுரோட்டில் விடப்படுவீர்கள் என்று பிரச்சாரம் பண்ணினார்கள். அவர்களின் கூற்று சரியென 2009 நிரூபிக்கபட்டுவிட்டது.

(“இயற்கை அனர்தங்களுக்கு உதவி புரிவோம்” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு சாமான்ய தமிழ்நாட்டு பிரஜையின் ஆதங்கம்

திமுகவையும், அஇஅதிமுகவையும் அகற்ற மக்கள் விரும்பவில்லையா அல்லது அந்த இரண்டு கட்சிகளையும் அகற்றும் சக்தி மக்கள் நலக்கூட்டணிக்கு்இல்லை ; எனவே மக்கள் அந்த கூட்டணியை ஒரு பொருட்டாக கருதவில்லையா? கம்யூனிஸ்டுகள் வாக்குகளை பெறத்தவுறினாலும் சமூக விஞ்ஞானம் அறிந்தவர்கள்; மக்களிடம் சென்று பணியாற்றுபவர்கள் என்பது்உண்மையானால் உண்மை நிலையை சரியாக சொல்லவேண்டும். வாக்களித்த 100 பேரில் 40 பேர திமுகவிற்கு, 41 பேர் அஇஅதிமுகவிற்கு வாக்களித்துள்ளது எதை உணர்த்துகிறது. தேவை திமுக, தேவை அஇஅதிமுக இந்த மாற்றுவோம் என்பதெல்லாம் கூடாத வேலை என்பதை்உணர்த்துகிறதா? அல்லது மாற்றம் வேண்டும் என்றே கருதினாலும் அதற்கு உங்களிடம் சக்தி இல்லை என்று சொல்கிறார்களா? ஊழல் என்பதை ஏற்கும் மக்களா? ஊழல் ஒழிப்பு அவசியம் இல்லை என்பதா? இந்த இரண்டு கட்சிகளின் ஊழல் தமக்கு லாபம் என வாக்களிக்கும் மக்களும் உணர்கிறார்களா? ஊழலை வேண்டாம் என்று சொல்ல மக்கள் தயாராகவில்லையா?
(Kanniappan Elangovan)