தமிழக தேர்தல் நடந்தது என்ன…?

அண்மைய உலக வரலாற்றில் பெரும் திருவிழாவாக நடந்து முடிந்த தேர்தல்.
உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சிகள்
முடிச்சு அவிழாத மர்மங்கள் பல

570 கோடியுடன் அகப்பட்ட பெரும் வாகனங்கள்

12 பணம் எண்ணும் இயந்திரங்களுடன் பிடிபட்ட பணக்கட்டுகள்.
வாக்களிப்பு அன்று 73.58உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்ட சத விகிதம் அடுத்த நாள் 74.68 சதவிகிதமாக மாறிய அதிசயம்.

(“தமிழக தேர்தல் நடந்தது என்ன…?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறுவர் மனத் துஷ்பிரயோகம்

யாழ்ப்பான வைத்தியசாலையில் பனியாற்றிய மன நல வைத்தியரான கலாநிதி.தயா சோமசுந்தரம் புலிகள் அதிகமாக விடலைப் பருவத்தினரை தமது இயக்கத்தில் சேர்த்ததைய்க் குறிப்பிட்டு ; 11 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து 15 வயதில் நான்கு வருடங்களாக புலிகளிலிருந்து “போராடிய” ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையாளருக்கு (The Independent) குறிப்பிட்டதை சாதாரனமான உதாரன சம்பவமாக கொள்ளமுடியாது.

(“புலிகளின் சிறுவர் மனத் துஷ்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம்.

(“ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் முடிவு : அச்சுதானந்தன் மகிழ்ச்சி

மக்களின் பங்கேற்புடன் தேர்தல் வாக்குறுதிகளை இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) அமல்படுத்தும் என்றும் முற்றிலும் ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை எல்டிஎப்பிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.மலம்புழா தொகுதியில் 23,142 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற் கடித்த அச்சுதானந்தன், கேரள சட்டமன்றத் தேர்த லில் இடதுஜனநாயக முன் னணிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்த வாக்காளர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார்.

(“தேர்தல் முடிவு : அச்சுதானந்தன் மகிழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 34)

குச்சவெளி பற்குணத்துக்கு பிடித்த பிரதேசமாக இருந்த்து.ஆனால் இங்குள்ள போக்குவரத்து வசதியீனங்கள் அதுவும் மழைகாலங்களில் தடைப்படும்.சலப்பை ஆறு,புடவைக்கட்டு,யான் ஓயா ஆகியவை வெள்ளம் பெருக்கெடுத்தால் தொடர்புகள் துண்டிக்கப்படும்.இதன் காரணமாக புல்மோட்டை மக்கள் தமது பகுதிகளை அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்க கோரிக்கை வைத்தனர்.அவரகள் காரணங்கள் நியாயமானவை.ஆனால் சிலர் தமிழ் பிரதேச நிரவாகத்தைவிட சிங்கள பிரதேசத்துடன் இணைவது இலாபம் என்றும் கருதினர்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 34)” தொடர்ந்து வாசிக்க…)

வைகோ மாபெரும் “வெற்றி”.. !

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும். மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை.

(“வைகோ மாபெரும் “வெற்றி”.. !” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

(“தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 132
திமுக கூட்டணி 99
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 01
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி 86 தொகுதிகளில் முன்னிலை

கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி 52 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. கண்ணூர், திருச்சூர், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இடது சாரிகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர். ஆனாலும் திருவனந்தபுரம், எர்ணாக்குளம், கோட்டயம் ஆகியவற்றில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கடும் சவால் அளித்து வருகிறது. திருச்சூரில் இடது ஜனநாயக முன்னணி 13 தொகுதிகளிலும் வெற்றி முகம் காட்டி வருகிறது. திருவனந்தபுரத்தில் 14 தொகுதிகளில் இடது சாரிகள் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 134
திமுக கூட்டணி 79
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 05
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00