கூட்டணி வாரியாக – முடிவுகள் |
|
---|---|
தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118 |
|
அணிகள் |
முன்னிலை / வெற்றி |
அதிமுக கூட்டணி | 99 |
திமுக கூட்டணி | 79 |
தேமுதிக – ம.ந.கூ | 00 |
பாமக | 00 |
பாஜக கூட்டணி | 00 |
நாம் தமிழர் | 00 |
Author: ஆசிரியர்
தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்
திராவிடக் கட்சிகள் பிரமுகர் கட்சிகளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். ஆனால் காரியம் ஏதும் ஆகவேண்டும் என்றால் இவர்களையே பிடித்தாகவேண்டும். இதில் பெரியார் வழி வந்த தி.க. உறுப்பினர்கள் பலர் கொள்கைப் பிடிப்புடன் இன்றுவரை செயற்படுகின்றார்கள். இவர்களின் பல திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். தாலி கட்டமாட்டார்கள். மதச் சடங்குள் ஏதும் செய்யமாட்டார்கள். தி.க. வில் உள்ள ஒரு தலைவர் முன்னிலையில் மாலையை மட்டும் மாற்றிக் கொள்வார்கள். திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் பற்றி திருமணவிழாவிற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்துரை மாதிரியான முற்போக்கு கருத்துக்களைத் தெரிவித்து பேசுவார்கள். புது வாழ்வை ஆரம்பிப்பவரகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள். வேலை வாய்பு வீடு அமைப்பது அல்லது குறைந்த வாடகைக்கு பிடித்துக் கொடுத்தல் போன்றவை. எங்களையும் மிகவும் மரியாதையுடன் தோழமையுடன் நடாத்துவார்கள்.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலையிலும் அதிமுக கூட்டணி இதற்கு பின்னால் அடுத்த நிலையிலும் இருக்கின்றன. மற்ற கட்சிகள் இதுவரை எந்h ஒரு தொகுதிலும் முன்னிலை வகிக்கவில்லைசில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தேர்தல் பற்றி வெளியிட்டிருந்த எனது தேர்தல் கணிப்பு அனேகம் சரியாக அமையலாம் என்றே இதுவரை முடிவுகள் தெரிவிக்கின்றன.
1978 களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு காரணங்களுக்காக ஆகக் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும் சென்று வருகின்றேன். பல தரப்பட்ட அரசியல் பின்னணியை உடையர்வர்கள் எனது நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர். எல்லோரும் ஒரு குரலில் கூறும் விடயம் ‘…இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுத்த மோசம் எங்கே மக்களைப்பற்றி யோசிக்கின்றார்கள் திருடர்கள் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களின் ஓரே நோக்கம்…’ என்று. நான் திருப்பி கேட்பேன் அப்போ ஏன் திரும்ப திரும்ப இவர்களையே தெரிவு செய்கின்றீர்கள் என்று. அவர்களின் பண பலத்திற்கு முன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள். காமராசர் போன்ற ஒருவர் அல்லது திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், போல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பார்கள். ஆனால் கடந்த 40 வருடங்களாக தமிழ்நாட்டு மக்கள் இந்த திராவிடக் கட்சிகளிடம் மட்டுமே சரணடைந்து கிடக்கின்றனர்.
(சாகரன்)
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
கூட்டணி வாரியாக – முடிவுகள் |
|
---|---|
தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118 |
|
அணிகள் |
முன்னிலை / வெற்றி |
அதிமுக கூட்டணி | 37 |
திமுக கூட்டணி | 41 |
தேமுதிக – ம.ந.கூ | 00 |
பாமக | 00 |
பாஜக கூட்டணி | 00 |
நாம் தமிழர் | 00 |
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
கூட்டணி வாரியாக – முடிவுகள்
தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118
அணிகள் முன்னிலை / வெற்றி
அதிமுக கூட்டணி: 25
திமுக கூட்டணி: 26
தேமுதிக – ம.ந.கூ: 00
பாமக: 00
பாஜக கூட்டணி: 00
நாம் தமிழர்: 00
சாமசர மலை சரிந்தது
307,369 பேர் பாதிப்பு
6 பேர் உயிருடன் புதைந்தனர்
1919க்கு அழையுங்கள்
பாடசாலைகள் 208 க்கு பூட்டு
நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 33 )
பற்குணம் இந்தக் காலங்களில் குச்சவெளி ப.நோ.கூட்டுறவுச் சங்க தலைவராக பொறுப்பேற்க நிர்பந்திக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்ற பின் புதிய கட்டடம் ஒன்றுக்கு அலுவலகம் மாற்றப்பட்டது. இந்தக் காணியில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஏழைக்குடும்பம் வாழ்ந்து தோட்டம்செய்து வந்தனர்.அதே நேரம் மாடுவளர்ப்பும் அவர்களது தொழில்.இவரகளை சிலர் வெளியேற்ற விரும்பினர்.ஆனால் பற்குணம் அதை மறுத்துவிட்டார்.இதே போல ஒரிரு குடும்பங்கள் அரசாங்க காணிகளில் குடியிருந்தனர்.அவரகளுக்கு காணிகளை வழங்கமுடியாத போதும் அவர்களை பாதுகாத்து அங்கே இருக்க வழிசெய்தார்.
பொய்யர்களின் துகிலுரித்த “கூர்வாளின் நிழல்”
(ரகு)
புலிகள் அல்லது புலிப்பினாமிகள் பொய்களில் ஊறிப்போனவர்கள். 2009 மே மாதம் வரை இருண்ட நிலமாக இருந்த வன்னியில் பொய்தான் ஆட்சி செய்துகொண்டிருந்தது. உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கும், ஊடகங்களுக்கும் பொய்கள்தான் பரப்பப்பட்டன. வன்னி மீட்கப்பட்ட பிறகுதான் அங்கே உண்மைகள் புரியத் தொடங்கின. புலிகள் பற்றி யாரும் விமர்சித்தால் அவர் துரோகியாக்கப்பட்டதே வரலாறு. உண்மைகளை யாராவது வெளிக்கொணர்ந்தால் எந்த வழியிலாவது அதனைப் பொய்யாக்கவே முற்படுவார்கள்.
(“பொய்யர்களின் துகிலுரித்த “கூர்வாளின் நிழல்”” தொடர்ந்து வாசிக்க…)
சபரகமுவ ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி பெறும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
(மக்கள் ஆசிரியர் சங்கம்)
2016-2017 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சிக்கு ஆசிரியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை கல்வியமைச்சின் ஆசிரியர் நிர்வாகப் பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஆசிரியர் உதவியாளர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சபரகமுவ மாகாண ஆசிரிய உதவியாளர்களில் நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து பின்னர் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு தெரிவாகியவர்களுக்கு பயிற்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சின் ஆசிரிய நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளமை தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
(“சபரகமுவ ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி பெறும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)
அதிமுக தனிப்பெரும் கட்சி: தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்திடிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 111 இடங்களையும், திமுக கூட்டணி 99 இடங்களையும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி 3 இடங்களையும், பாமக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றும். மற்ற 16 தொகுதிகளில் இழுபறி நிலவும் என்று தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளை இந்த கருத்துகணிப்பில் சேர்க்கப்படவில்லை.