தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.
(“தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம்” தொடர்ந்து வாசிக்க…)