டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!

இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த நிலையில், சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் கோரப்பட்டது.

(“டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

உயிர் காக்கும் விமானப் பயணம்

 

விமான விபத்தின் போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது அன்மைகாலமாக சகஜமாகி வருகிறது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

(“உயிர் காக்கும் விமானப் பயணம்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய முன்னணிக்கு கோட்டா தலைவர்?

கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

‘டட்லி – செல்வா’ இன்னொரு பக்கம்!

‘கே.எம்.பி.ராஜரத்ன எனும் சிங்கள இனவாதத்தலைவரும், தமிழினவாதத் தலைவர்களான சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருதரப்பினரும் டட்லியின் அரசாங்கத்தில் இருந்தனர். ‘இலங்கையில் சோஸலிஸத்தின் தந்தை’ என்று அறியப்பட்ட பிலிப் குணவர்த்தனவும், ‘யங்க்கி டிக்கி’ (அமெரிக்க ஆதரவாளர்) என அறியப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒரே அமைச்சரவையில் இருந்தனர். டட்லி இந்த எதிர்த்துருவங்களை ஒன்றுபடுத்தியது மட்டுமல்லாது, ஐந்து வருடங்களுக்கு, அதாவது முழுப்பதவிக்காலத்துக்கும் அரசாங்கத்தை நடத்தினார். சுதந்திர இலங்கையில் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருந்த முதல் அரசாங்கம் இதுவாகும்.

(“‘டட்லி – செல்வா’ இன்னொரு பக்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா தாரை தப்பட்டை?

ஒருமித்த குரலில் உங்கள் சேவை எம்மக்களுக்கு தேவை என அழைத்ததால்தான், முன்நாள் நீதியரசர் இன்நாள் முதல்வர் ஆனார். ஆனால் தன் தம்பிக்கு அமைச்சர் பதவி கேட்டு சிபார்சு செய்த சுரேஸ் கொடுத்த அழுத்தத்தில், சினமுற்ற முதல்வர் அதை பகிரங்கமாக கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அறைக்குள் நடந்த விடயத்தை அரங்கில் கூறியது அநாகரிகம் என விமர்சனம் எழுந்தாலும், இன்று நடக்கும் சம்பவங்கள் ஒரு நீதி அரசராக இருந்தவரை சிறுமைப்படுத்தி, அவர் சிந்தையை கலக்கும் செயல் அன்றே தொடங்கி விட்டதாகவே தென்படுகிறது. தேரை இழுத்து தெருவில்விட என ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்ப்படுகிறது என்பது புரிகிறது.

(“முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா தாரை தப்பட்டை?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி

 

‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க’

தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.

(“தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஜோதிபாசு நினைவு தினம் இன்று…

1914ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஜோதி கிரண் பாசுவாக கல்கத்தாவின் நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஜோதிபாசு. அவருடைய தந்தை நிஷிகாந்த் பாசு. இவர் ஒருடாக்டர். இவரது சொந்த ஊர் கிழக்கு வங்காளத்தில் (இப்போதையவங்கதேசம்) உள்ள பர்தி கிராமமாகும். பாசுவின் தாயார் ஹேமலதா பாசு. 1920ம் ஆண்டு கொல்கத்தாவின் தர்மதாலா என்ற பகுதியில் இருந்தலோரிட்டோ பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கினார் பாசு. பள்ளியில் பாசு சேர்க்கப்பட்டபோது அவரது பெயரை ஜோதிபாசு என்று சுருக்கி சேர்த்தார் பாசுவின் தந்தை.

(“தோழர் ஜோதிபாசு நினைவு தினம் இன்று…” தொடர்ந்து வாசிக்க…)

ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா?

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.
நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம்இ இரத்தினபுரிஇ கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.
புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.
அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றி யுள்ளார். வீதி அபிவிருத்திஇ பாலங்கள் நிர்மாணம்இ நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்திஇ சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்திஇ கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.

1971ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாவட்ட ரீதியிலான தரப்படுத்தலை த.வி.கூட்டனி எதிர்க்க முடிவுசெய்தபோது அது யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனையமாவட்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதமான சட்டம் அதை நாம் எதிர்க்க முடியாது என்று குரல் எழுப்பினார் அவ்வேளை அமிர்தலிங்கம் இந்த இரண்டு துரையாலும் (மற்றையது இராஜதுரை)
எமக்கு ஒரே பிரச்சனைதான் என்று சொன்னாராம்.

மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.
தமிழ்இ சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத் துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரச துறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.
அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.
இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய

1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதிஇ தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.இவ்வேளை த.வி.கூட்டணி எந்த ஒரு எதிர்ப்பு போராட்டத்தையும் செய்யவில்லை.மண் பறிபோகிறது என்று இன்றுவரை கத்தும் இக்கட்சியினர் மூதுர் தொகுதி பறிபோகையில் தங்கத்துரைக்குத்தான் தொகுதி பறிபோகிறது என்று மெளனம் காத்தனர். இதற்கு மாற்றாக வவுனியாதொகுதியில் இருந்து பிரித்து கிளிநொச்சி தொகுதியை உருவாக்குவதும் அதனூடாக மூதூரில் இழக்கப்படும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பீடு செய்வது என்று சிறிமாவுடன் தமிழரசுக்கட்சி இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையை அமிர்தலிங்கம் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.
பொதுமக்களினதும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கு இழைத்ததுரோகத்தையும் மறந்து தொடர்ந்து கட்சி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.

மீண்டும் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதாரஇ கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சம காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட அப்பாவிமக்கள் ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா?

(05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது பாசிச புலி பயங்கரவாதிகளால் குண்டுவைத்து கொலை செய்யப்பட்டார்.இன்று அவரது 19வது நினைவுதினம் .)

எம்.ஆர் ஸ்டாலின்

போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது?

வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.

(“போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது?” தொடர்ந்து வாசிக்க…)

மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது

காணாமல்போன எம்.எச்.370 விமானத்தை தேடிவரும் குழுவினர் விபத்தில் மூழ்கிய 19ஆம் நுற்றாண்டு கப்பல் ஒன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர். இந்திய சமுத்திரத்திற்கு கீழ் கடந்த கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் மர்மப் பொருளொன்று பற்றி கடலுக்கு அடியில் தேடுதலில் ஈடுபட்டு வரும் சோனார் உபகரணம் சமிக்ஞை வழங்கியது.

(“மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது” தொடர்ந்து வாசிக்க…)