நான் தீவிரவாதியல்ல – சி.வி

என்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்கள் ஊடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட, தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(“நான் தீவிரவாதியல்ல – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி

தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏற்கெனவே வலியிறுத்தியுள்ளோம். இந்த நில விடுவிப்புக்காக நாம் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனினும், இன்னமும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. இப்போது தான் பகுதி பகுதியாக விடுவிக்கின்றனர். இவை முழுமையாக விடுவிக்கபடவேண்டும்.

(“மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி” தொடர்ந்து வாசிக்க…)

தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை…

லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன்34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.

(“தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை…” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமருக்கு மாலையிட்ட முதல்வர்! ஜனாதிபதியின் தந்திரமா?

ஜனாதிபதி வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திணைக்களத்தில் இருந்து வெளியேறு முன் மகிந்த மைத்திரிக்கு கைலாகு கொடுக்க நீட்டியபோது மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவிக்கு பயந்த மைத்திரி இரு கரம் கூப்பி வணக்கம் வைத்தார். இருந்தும் மகிந்த மைத்தியின் தோள் தட்டி சென்றார். கை கொடுப்பதை தவிர்த்ததால் மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவி மைத்திரியின் தோளில் மட்டும் பட்டதால் அதன் தாக்கம் ஏற்படாது வென்றுவிட்டார் என மகிந்தவின் கேரள மாந்திரீகர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.

(“பிரதமருக்கு மாலையிட்ட முதல்வர்! ஜனாதிபதியின் தந்திரமா?” தொடர்ந்து வாசிக்க…)

பட்டம் விடுவோம்…

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும் போட்டி வெள்ளிக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் பட்டப்போட்டிகள் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. இந்த பட்டப்போட்டியில் பல வடிவங்களை கொண்ட இராட்சத பட்டங்களை போட்டியாளர்கள் வானில் பறக்க விட்டனர்.

தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்

 

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்து விட்டன. மற்றவற்றை கடலில் கொண்டு விடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவியராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

(“தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்” தொடர்ந்து வாசிக்க…)

தன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் வழங்கவேண்டும்.!

எனது “பத்தும் பலதும் முற்றும் உண்மை” என்ற கட்டுரையில் முதல்வரின் செயல் மீதான எனது விசனத்தை எழுதி அவர் தமிழ் மக்கள் பேரவையின் தலைமை ஏற்று அடுத்தவர் சுயநல விருப்புக்கு துணை போவதை விமர்சித்தேன். அவருக்கு முன்பு அரணாக இருந்தவர்களே அவரின் இந்த செயல் கண்டு விசனம் அடைந்துள்ளதாக எழுதினேன். ஆனால் அண்மையில் மாகாண சபை உறுப்பினர்கள் முதல்வருடன் நடத்திய சந்திப்பின் பின்பு அவர்கள் முதல்வர் மீது விசனம் கொள்ளவில்லை அவர் நிலைகண்டு வேதனைப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது.

(“தன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் வழங்கவேண்டும்.!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் – முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா?

அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும்.

(“தமிழ் – முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

அத்து மீறல்களும் இனத் துவேசிகளும்

ஜெர்மனி கெல்ன் (Köln) நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. ஜெர்மனியில் மட்டுமல்லாது, பிற ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு வருகின்றது.

(“அத்து மீறல்களும் இனத் துவேசிகளும்” தொடர்ந்து வாசிக்க…)