வாழ விடு……. War ஐ விடு…… (பகுதி 1)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

அகதியாய் பிறந்து அகதியாய் வாழ்ந்து அகதியாய் மரிக்கும் பிரஜைகள் என்று ஒருவர் இருப்பாராயின் அது பாலஸ்தீனர்கள் என்று உலகம் சொல்லும் தேசத்தில் உக்கிரமான போர் எழுந்துள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

(Thesam Jeyabalan)

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா?

(என்.கே.அஷோக்பரன்)

கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை.

இரட்டை நிலைப்பாடு

(இலங்கநாதன் குகநாதன்)

கனடாவுடனான சிக்கலில் இந்தியாவினுடைய இறையாண்மை போய் விட்டது என வாய் கிழிய வட இந்திய ஊடகங்களும், இந்துத்துவவாதிகளும் கூச்சலீட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததே! உண்மையில் அச் சிக்கலில் கனடாவின் இறையாண்மைதான் பாதிக்கப்பட்டது, அதாவது கனடா மண்ணில் இந்திய உளவாளிகள் தமது எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தினை நடாத்திய செயல் அது.

இந்தியாவின் இராஜதந்திரமற்ற செயல்

(சாகரன்)

உலக அரங்கில் இன்று அதிகம் பேசப்படும் விடயம் எது என்றால் அது ரஷ்யா உக்ரேன் போர் என்று சிலர் நினைக்கலாம்….

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஐரோப்பிய மேற்குலகின் சுரண்டல்களுக்கு எதிரான மக்கள் மன நிலை அதுசார்ந்த அரசியல் நிலமை என்று தோன்றலாம்……

தோழர் சாருமஜூம்தார் நினைவு (ஜூலை – 28 ) நாள்!

திருத்தல் வாதம் ஒழித்திட,
உலகின் ஒளி தோழர் மாவோவை உயர்த்திய அருமைத் தோழர்
சாருமஜும்தார்
நினைவு நாள் ( ஜூலை – 28 ) உயர்த்துவோம்!
உலகின் ஒளி தோழர்
மாவோ அவர்களின்
சிந்தனைகளை இந்திய மண்ணில் விதைத்த பெருமை, இங்கு தோன்றிய
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியையே .( CPIML ) சாரும்.

“மேலும் மேம்பட்ட உலகை விரும்புகிறோம்”

(Maniam Shanmugam)

எதற்காக புரட்சியை மேற்கொண்டோமோ அதை நோக்கிய பாதையில் நிகரகுவா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியை நடத் திய தலைவர்களில் ஒருவருமான டேனியல் ஓர்டேகா கூறியுள்ளார். அமெரிக்க ஆதரவுடன் நிகரகுவாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த அனஸ்டேசியோ சோமோசாவின் ஆட்சிக்கு எதிராக சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது.

உண்மைகளை உரத்துப் பேசும் இந்திய அரசியல் களம்

(Rathan Chandrasekar)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழகச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
காங்கிரஸ் ஊடகப்பிரிவுத்தலைவர் கோபண்ணா முன்னிலையில்….
புதிய நாடாளுமன்றத் திறப்பு விவகாரத்தில், குடியரசுத்தலைவரைப் புறக்கணித்த மோடி அரசு-

ஆஸாத்தின் மீள் பிரவேசம்!

(Maniam Shanmugam)

ஈராக்கிலும், லிபியாவிலும் ஆட்சியிலிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்களைக் கவிழ்த்து, அந்த நாடுகளின் தலைவர்களான சதாம் ஹூசைன் மற்றும் கேணல் கடாபி போன்றேரைக் கொலை செய்த மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள், அந்த நாடுகளை சீரழித்து இன்று ஸ்திரமற்ற நிலையில் வைத்துள்ளன.

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 24

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல!  ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை.