மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.

எத்தனை சோதனைகள்? எத்னை துன்பங்கள்? அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

(“மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.” தொடர்ந்து வாசிக்க…)

கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

(“கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.” தொடர்ந்து வாசிக்க…)

சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!

தனக்கு இருந்த நாவன்மையால், அடுக்கு மொழி அலங்கார பேச்சில் பேசி, ஒத்து மொத்த தமிழனையும் தன் மாயையில் விழ வைத்து , அவர்களை சிந்திக்க தெரியாத ஜடங்களாக ஆக்கியவரின் பிறந்த நாள்!

உன் முகத்தை மட்டும் காட்டு! முப்பது லட்சம் ஓட்டு விழும் என்று நடிகரை அழைத்து, தமிழனை விசில் அடிச்சான் குஞ்சுகளாக மாற்றியவரின் பிறந்த நாள்!

மொழி பற்று என்ற பெயரில், கல்லூரி மாணவர்களை தூண்டி, ஆர்பாட்டம், கலவரம் செய்வித்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற்று, இன்று வரை ஓரளவும் ஹிந்தி மொழி அறியாதவர்களாக தமிழ் மக்களை ஆக்கியவரின் பிறந்த நாள்!

அடைந்தால் திராவிட நாடு! இல்லையெனில் சுடுகாடு என்று அடுக்கு மொழியில் அலங்கார மாக பேசி, இன்று வரை வடக்கு தெற்கு என்ற மாநில, மொழி வெறியில் தமிழன் திறிய காரணமாக இருந்தவரின் பிறந்த நாள்!

(“சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!” தொடர்ந்து வாசிக்க…)