“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

காஸாவில் தமது குழந்தைகளின்….

(Ravindran Pa)

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர்.

குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக…. வா வா வா… ஒளி படைத்த கண்ணினாய்…… வா வா வா…

(சாகரன்)

விவாதிப்பதும்…. கலந்துரையாடுவதும்…. பேச்சுக்களை நடாத்துவதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதற்கு அவசியமானவைதான். இங்கு பிறக்கும் ‘கலகங்கள்’ தெளிவுகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்புகளை எற்படுத்தும்.

இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் பட்டதாரிகளை உருவாக்க அரசின் செலவினம்? இத்தனை கலைப் பட்டதாரிகள் நாட்டுக்கு தேவையா?

(By: Dr Ziyad Aia)
பாராளுமன்ற தெரிவுக்குளு August மாதம் சமர்ப்பித்த அறிக்கையின்படி (Dated 21st, July 2023)
2021 பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில்
26.2% கலைப்பிரிவுக்கும்
18.2% வணிகம்
மற்றும் இதர துறைகளுக்கான (படத்தை பார்க்க) இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சி.சுப்ரமணியம் என்பது முழுப் பெயர்

(By Kavitha Bharathy )

திரைப்படக் கலைஞர் ராஜேஷ்
என் நெருங்கிய நண்பர்.
இதுவரை ஊடக வெளிச்சத்துக்கு வராத சுவாரசியமான தமிழ்நாட்டு ஆளுமை யாரேனும் இருந்தால் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வேண்டும் என்று ஒரு பிரபல வார இதழ் ராஜேஷிடம் கேட்டு இருந்தது…
” உங்ளுக்கு அது போன்ற யாரையேனும் தெரிந்தால் சொல்லுங்கள் பாரதி. போய் பார்க்கலாம்” என்றார் ராஜேஷ்.

தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் பிரச்சினைக்குத் தீர்வாகாது

ஒவ்வொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகள் தொடர்பில் மனம் விட்டு கலந்துரையாடுதல், தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்ளுதல் இன்றேல், ஆலோசனைகளை கேட்பதன் மூலமாக, மனப்பாரம் ஓரளவுக்கேனும் குறைந்துவிடும்; பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

காலாவதியான (காலம்) கஞ்சி .

கொதித்த சுடுநீருக்குள்
தீட்டல் அரிசியை கலந்து
அவியவிட்டு இறக்கினால் கஞ்சி .
பால் மறந்த கஞ்சி.
கஞ்சிக்கு மட்டுமல்ல
பிறந்த குழந்தைக்கும் பாலற்று
சுருங்கிக்கிடந்தன முலைகள்.

காரல் மார்க்ஸ்

(கே.சுப்பராயன் M.P.)

” காரல் மார்க்ஸ் ” வரலாற்று ஏடுகளில் மங்காது ஜொலித்துக் கொண்டிருக்கிற பெயர்.

தோழர். கார்ல் மார்க்ஸ் பிறந்து 205 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!அவர் சிந்திப்பதை நிறுத்தி விடைபெற்றுக்கொண்டு 140 ஆண்டுகள் கடந்துவிட்டன!

கண்டன அறிக்கை

(Theva Thasan Facebook இல் இருந்து பெறப்பட்டது)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபிசி யின் சிங்களச்சேவையானது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய தகவல்களை ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரில் சிலரது வாக்குமூலங்களுடாக வெளிக்கொணர்ந்தது.