எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
ஏற்றமுறு செங்கையாழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !
(“ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!” தொடர்ந்து வாசிக்க…)