“அரசியல் இலஞ்சம் பெற்ற இருவர் போட்டியிடவில்லை”

எங்கள் எம்.பிக்கள் இருவர் மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்கள். அவ்விருவரும் இம் முறை தேர்தல் போட்டியிடவில்லை என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரிசியை மறைத்த வியாபாரி கைது

 நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் சேவை அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர்.

காசோலை மோசடி: முன்னாள் EPDP எம்.பி கைது

காசோலை மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் அவரின் முன்னாள் செயலாளர் தினேஷ் ஆகியோர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தரவும் கூறி 20 லட்சம் ரூபாய் காசோலை மோசடி தொடர்பில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து விளக்கம்

பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த நாட்டின் பிரதேசத்தை எவருக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலம் நீடிப்பு

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதி குழாம் விதித்த மரண தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஜனாதிபதி – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயது வர்த்தமானியில் வெளியிடப்படாதமை குறித்த அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அடுத்து, 200 இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறக்கூடிய அபாயம் உள்ளதால், அரச நிர்வாக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அறிய வருகின்றது.

உப்புத் தட்டுப்பாடு; இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.