தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்

மலையகத்தில் சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று, 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரசாரம் செய்து போராடிய, மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு, இன்று படிபடியாக நிறைவேறி வருகிறது என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு குறித்து, வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோதி

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை வந்துள்ளார். வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்பட அமைச்சர்கள் வரவேற்றனர். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

(“இலங்கை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோதி” தொடர்ந்து வாசிக்க…)

நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!

அச்சு அசலாக அந்த இளைஞர் உலகப் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி போலவே இருக்கிறார். அவர் ஈரானைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரிசா பர்தேஷ். சமயங்களில் ரிசா பர்தேஷ் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸியின் உதைப்பந்தாட்டத்திற்கான மேலங்கியைப் போன்ற 10 இலக்கம் கொண்ட சட்டையை அணிந்து கொண்டே வெளியில் செல்கிறார். அப்போதெல்லாம் அவருக்கும் மெஸ்ஸிக்குமிடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாமலிருப்பதால், ஈரானியத் தெருக்களில் அவரைக் காண மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. இது பொலிஸாருக்கு மிகுந்த தொல்லையையும் கொடுக்கிறது. அதனால் அவரைச் சமயங்களில் போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கே கொண்டு போகிறார்களாம் ஈரானியப் போலீசார்.

(“நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!” தொடர்ந்து வாசிக்க…)

கணவன் கழுத்தைக் குதறிய சிங்கம்… காப்பாற்ற மனைவி செய்த சிம்பிள் வேலை!

பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பக்கமாகவிருக்கும் டவுள்ளேன்ஸ் (Doullens ) என்ற பகுதியில் மிருகங்களையும் வைத்து நடாத்தப்படும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழமை போல, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.சர்க்கஸின் ஒரு பகுதியாக சிங்கத்தை வைத்து சர்க்கஸ் காட்டும் சாகச நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அவ்வேளை, அந்த நிகழ்ச்சிக்கான பயிற்சியாளர் லோபெரோட் ( Loberot) என்பவரும் சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூடவே இருந்தார்.

(“கணவன் கழுத்தைக் குதறிய சிங்கம்… காப்பாற்ற மனைவி செய்த சிம்பிள் வேலை!” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய பிரதமரே வருக வருக

இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு இன்று (11) மாலை வருகைதரவிருக்கிறார். விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மாலை 6 மணிக்கு வந்தடையும் அவரை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்பர். அத்துடன், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுடன், படையணி மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்படும்.

(“இந்திய பிரதமரே வருக வருக” தொடர்ந்து வாசிக்க…)

பாராளுமன்றத்தில் பாலூட்டிய தாய் எம்.பி!

 

அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கு கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம் தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை கொடுப்பதில் லாரிசாவுக்கு சிறிதும் விருப்பமில்லை.

(“பாராளுமன்றத்தில் பாலூட்டிய தாய் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!

வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பினை தனது பதவி முடிவுறும் தறுவாயினில் பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துடன் வடமாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் உருவாக்கியுள்ளார்.

(“அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை

எனது மண்டை கறள்கட்டிவிட்டதென எவ்வாறு சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் பேசலாமென நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா. அண்மைக்காலமாக உச்சம் பெற்றுவரும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி- ஈ. பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. அப்போதே யாழ்.ஊடக அமையத்தினில் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோவென சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.

(“மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.

(“அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாத இரவொன்றில் தனது நண்பருடன் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கோஷ்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அதன் பின்னர் அவரை மிக மோசமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

(“கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)