கடந்த 15-20 ஆண்டுகளில் சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக அவ்வப்போது எழுதியவற்றில் ஒரு பகுதி நூலாக வெளிவருகிறது.
வெளியீட்டு நிகழ்வு 06-05-17 மாலை 4.00 மணி. திருமறைக்கலாமன்றம். (யாழ் பிரதானவீதி தண்ணீர் தாங்கி அருகே)
Category: செய்திகள்
மைத்திரியின் பக்கம் நிரூபமா ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார். அவருக்கு, மூன்றாவது வரிசையிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி!
(எஸ். ஹமீத்)
நேற்று திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதில், ”வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் எனக்கான கௌரவமாகவும் எடுத்துக் கொள்வேன்.” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை ”முடிவெடுப்பதில் கிம் ஜோங் உன் ஒரு மிடுக்கான நபர்!” என்றும் வடகொரியா அதிபரை டிரம்ப் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(“”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி!” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்
தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.
(“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்” தொடர்ந்து வாசிக்க…)
‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’
“நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
(“‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர் தின நிகழ்வு நடத்தப்பட்ட பொழுது……
தமிழரசுக்கட்சியின் இரட்டைவேடம் அம்பலம்! சிக்கினார் சிறிதரன்.
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்விஜயம் பற்றி தமிழ் மக்களுக்கு மூச்சுவிடாமல் உள்ளார். சிறிதரனின் ஆதரவு ஊடகங்களும் இவருடைய விஜயம்பற்றி மெளனமாகவே உள்ளனர்.
(“தமிழரசுக்கட்சியின் இரட்டைவேடம் அம்பலம்! சிக்கினார் சிறிதரன்.” தொடர்ந்து வாசிக்க…)
அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு
முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.
இஸ்ரேலை அழிப்போம் – வட கொரியா!
சில தரவுகள் இங்கே…!
(எஸ். ஹமீத்
சியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி அரபு நாடுகளிற் சில கூட இஸ்ரேலுடன் நட்புப் பாராட்டினாலும் தன்னுடைய மிக மோசமான எதிரியாக இஸ்ரேலைக் கருதும் நாடுதான் வடகொரியா.
ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம்
“உலக பாட்டாளிகளே உரிமை மீட்புக்காக ஒன்றுபடுங்கள்” எனும் தொனிப் பொருளில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தினக் கூட்டம் ஹட்டன் – டிக்கோயா புவியாவத்தை நகரில் மே 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு கட்சியின் மலையகப் பொறுப்பாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.