‛பூமியை போன்று 7 புதிய கோள்

‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது’ என நாசா அறிவித்துள்ளது.

7 புதிய கோள்கள்:

சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய மைல் கல்:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

சி.விக்கு மாரடைப்பு

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை முதலமைச்சருக்கு, கடந்த 1997ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றிருக்கின்ற நிலையில், தற்போது அவருக்கு சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

122 பேர் பழனிசாமிக்கு ஆதரவு

கடும் அமளிதுமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட, சபை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு ஆரம்பமானது. இரண்டு முறை பிரச்சினை ஏற்பட்டதால் குரல் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தாமல் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் வாக்களித்தானர். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்

யுத்தம் காரணமாக பாதிப்புக்கு முகங்கொடுத்த தமிழ் பெண்கள், தற்போது அவர்களது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக நல்லிணக்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அரச சேவை பெற்றுக்கொடுக்கும் ​போது பாலியல் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகள் ஊடாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில், 37 வருட கால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் உள்ளதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றார் பழனிச்சாமி

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, பதவி​யேற்றுள்ளார். ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 13ஆவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென இராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு?

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் முறை தொடர்பில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

(“கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியது.

(“பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

(“சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”·
என்று பத்து நாட்களுக்கும் மேலாக வீதியிலேயே படுத்தெழும்பிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும்வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்“ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அத்தனைபேரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது வீதி.

(““சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”” தொடர்ந்து வாசிக்க…)

ஓபிஎஸ் அணியில் 11 எம்.பி.க்கள்: அதிமுகவை உடைத்து அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக அரசு முடிவு?

அதிமுகவை உடைத்து மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.பி.க்கள் இணைந்துள்ளது இதை உறுதிப்படுத்துவதுபோல அமைந்துள்ளது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக கடந்த 5-ம் தேதி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அல்லது 9-ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கடந்த 7-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தன்னை மிரட்டி ராஜி னாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறப் போவதாகவும் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“ஓபிஎஸ் அணியில் 11 எம்.பி.க்கள்: அதிமுகவை உடைத்து அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக அரசு முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)