ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு

(சேகர் குப்தா)
சுவரில் எழுதிய சித்திரம் போல’ என் றொரு சொலவடை உண்டு. கிராமங் கள், நகரங்கள் வழியாக நீங்கள் பயணம் செல்லும்போது நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை நேரிலேயே உணர முடியும். அதைத்தான் ‘சுவரில் எழுதிய சித்திரம்’ என்பார்கள். இந்தியாவில் அதிலும், இந்திய அரசியலில் மாற்றங்களுக்கு என்றுமே குறைவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் இதயம், சுவர்களில்தான் என்றாலும் மிகையில்லை.

(“ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 காவாலிக் குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(“யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

(“எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆப்பிரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் விளக்கமளித்தனர்.

(“ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’

“சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பது இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு, கொலை அச்சுறுத்தல் மற்றும் முன்னாள் போராளிகள் கைது குறித்துக் கேட்ட போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

(“‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’” தொடர்ந்து வாசிக்க…)

டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு

உட்பட, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட் விதித்த தடையை நீக்க, மேல்முறையீட்டு கோர்ட் மறுத்துள்ளது. அமெரிக்க அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப், ஈராக், ஈரான், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்,
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.

(“டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஓபிஎஸ் ராஜினாமா; பிப்.9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.

(“ஓபிஎஸ் ராஜினாமா; பிப்.9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா” தொடர்ந்து வாசிக்க…)

திருமதி நவநாயகமலர் கதிரவேலு

மலர்வு : 4 ஏப்ரல் 1944 — உதிர்வு : 2 பெப்ரவரி 2017
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“திருமதி நவநாயகமலர் கதிரவேலு” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்த பின் இரண்டே நாட்கள் மட்டுமே வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ட்ரம்பின் மனைவியும் அமெரிக்க முதற் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப் அதன் பின் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். இவரது வெளியேற்றத்துக்குக் காரணமெனப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

(“வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்

அரியலூர் (திருச்சி) அருகே தலித் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்திருக்கிறார் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன். அத்துடன் நந்தினியின் பெண் உறுப்பை பிளேடால் அறுத்து 5 மாத சிசுவை வெளியே எடுத்து வீசிய கொடூரத்தையும் மணிகண்டன் செய்திருக்கிறார். அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

(“உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)