வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள பிக்கு, இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது (“மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு” தொடர்ந்து வாசிக்க…)
Category: செய்திகள்
கனடாவிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படவிருந்த முதல்வர் விக்னேஸ்வரன் தடுக்கப்பட்டதெப்படி?
அண்மையிலே கனடாவில் இடம்பெற்ற ஒரு தமிழர் அமைப்பொன்றின் 25 வருட நினைவுக் கொண்டாட்டத்திற்கான பிரதம விருந்தினராக தமிழர்களின் தற்போதைய தலைவராகத் தற்போது பார்க்கப்படும் உயர்நீதமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனே அழைக்கப்படவிருந்தார்.
நினைவுகளிலிருந்து சில …….
தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தோழர். வன்னி மாவட்டத்தில் பெரிய தம்பனையில் பிறந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கல்விகற்ற தோழர் நடேசலிங்கம் 28 -11-1981 அன்று ஸ்ரீ லங்கா இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் கொல்லப்பட்டார். அந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது தியாகிகளில் ஒருவர் தோழர் நடேசலிங்கம் அவர்கள் ஆகும்.
மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”
(“மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை” தொடர்ந்து வாசிக்க…)
பிடலுக்கு இன்று அனுதாபப் பிரேரணை
கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படும். அனுதாப பிரேரணையை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார். அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும். இதேவேளை, பிடல் கஸ்ட்ரோவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி
சர்ச்சைகளில் சிக்கியுள்ள தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் ஹி, தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய தயார் என்றும், தனது ஜனாதிபதிப் பதவி குறித்து தீர்மானிப்பதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விடுவதாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
(“பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)
குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’
“நிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க, நான் விரும்பவில்லை. என்றாலும், இவரது போக்கிரித்தனமான கருத்துகள் ஒரு சிலரைகூட தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன்” என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
(“‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)
அம்மானுக்கு விளக்கமறியல்
கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
‘கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது’
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயற்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.