விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி??

அண்மையில் கபாலி திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். தேவையற்ற நிகழ்வுகளுக்காக நாம் அளவுக்கதிகமாக பரபரப்பை உண்டாக்குகிறோம், அதில் நாமும் பங்கேற்கிறோம் என்கிற குற்ற உணர்வையே இப்படம் நாளடைவில் எமக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. கபாலி திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததால் ஒரு மாபெரும் நிகழ்வாக பார்க்கப்பட்டது. கதை கேட்டு வளர்ந்த தமிழகத்தில், உச்ச நடிகரான ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பு இயல்பானதே!

(“விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி??” தொடர்ந்து வாசிக்க…)

கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண்- கலைச்செல்வி

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ‘ எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா’ எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

(“கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண்- கலைச்செல்வி” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை

மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. ‘பசிக்கு எதிரான செயற்பாடு’ அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

(“தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல உதவினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான 48 வயதான Hamid Reza Jafary என்ற நபர் தாய்லாந்துக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சில ஆயிரம் டொலர்களுக்காக போலியான கடவுச்சீட்டுக்களைத் தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் போன்றோருக்கு வழங்கியுள்ளதாக ஏபி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

(“புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் கைது!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி: sooddram3@gmail.com

“பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததுள்ளார்.

(““பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்கள் கோரிக்கை

அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை, கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்களும் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என, கிளிநொச்சி வாழ் மலையக மக்கள், இன்று வெள்ளிக்கிழமை, நல்லிணக்க பொறிமுறை செயலணிக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

(“மலையக மக்கள் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா

ஜனநாயகக் கட்சியின் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டின்போது, அப்போது இலினொய்ஸ் மாநிலத்தின் செனட்டின் உறுப்பினராக இருந்த 42 வயதான பராக் ஒபாமா, மிகச்சிறந்த உரையொன்றை ஆற்றினார். அந்த உரை தான், பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை உண்மையில் தொடக்கி வைத்தது என்று சொல்வர்.

(“ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா” தொடர்ந்து வாசிக்க…)

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

(“போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)