இலங்கை பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலம்!

பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலத்தை நாடுகிறது இலங்கை! மார்ச் 6 இல் பீஜிங் பறக்கிறார் ரணில். சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். அமைச்சர் சரத் அமுனுகம இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனி விஜயத்தின் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்கின்றோம். ஐரோப்பாவில் மிகவும் முக்கிய நாடான ஜேர்மனி இலங்கையின் முக்கிய சந்தையாக உள்ளது. சில தரப்பினர் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அவர்களது காலத்தில் கடைபிடித்த கொள்கைகளினால் நாங்கள் சர்வதேசத்தில் தனிமைப்பட்டு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தமை எமக்குத் தெரியும்.

(“இலங்கை பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலம்!” தொடர்ந்து வாசிக்க…)

இவ்வருடம் தேர்தல் இல்லை

தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீள்திருத்தப் பணிகள், இதுவரை முற்றுப்பெறாதிருப்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதென்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது என, கொழும்பில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் கூறினார்.

(“இவ்வருடம் தேர்தல் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

மகனுக்காக கறுப்பு அங்கி அணிந்தார் மஹிந்த

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனான யோஷித, புதன்கிழமை ஆஜராகியிருந்தார். தேசிய ஆடையை அணிந்திருந்த அவர், அவ்வாடைக்கு மேலாக, சட்டதரணிகள் அணியும் கறுப்பு நிறத்திலான அங்கியையும் அணிந்திருந்தார். சட்டத்தரணியான மஹிந்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் அணியும் மேலங்கியை பல வருடங்களுக்குப் பின்னர், நேற்றே அணிந்திருந்தார்.

(“மகனுக்காக கறுப்பு அங்கி அணிந்தார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்து

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று (15.01.2016) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. இன்றும் இந்த அமர்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. நேற்று தனிநபர்களும் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை நேரில் சமூகமளித்து வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்தனர்.

(“அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

அரசு தரும் அழுத்தம் மின்சாரக் கதிரையைவிடக் கொடுமையானது! மகிந்த புலம்பல்!

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட பன்மடங்கு அதிகமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று(திங்கட்கிழமை) உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும். அது ஒருமுறைதான். இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனை. எனினும், ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 இலட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கான தலைவர் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். ” எனத் தெரிவித்தார்..

கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை இன்று முதல் பலூன் வழி கூகுள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது. பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இன்டர்நெட் சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இன்டர்நெட் வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இன்டர்நெட் சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

எனது காணியில் ஈ பி டி பி முகாம்! முறையிட்டும் பயனில்லை!

சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.டி.பி தனது சொந்த வீட்டை அடாத்தாக பிடித்து வைத்து முகாம் அமைத்துள்ளதாக தந்தை ஒருவர் பரிதாபத்துடன் அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துகேட்கும் அமர்வில் கூறியுள்ளார். இதன் போது மேற்படி குழுவில் ஈ.பி.டி.பி உறுப்பினரும் வட மாகாணசபை எதிர்கட்சி தலைவருமான சி.தவராசா இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி யாழ் மாவட்டத்துக்கான அமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் போதே தனது ஆதங்கத்தை வயோதிப தந்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த அமர்வு அரசியல் அமைப்பு தொடர்பானது எனவும் இதில் இவ்வாறான விடயங்கள் கதைக்க முடியாது எனவும் குழுவின் மேற்பார்வையாளர்களால் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

(சங்கதி 24.கொம்)

யோசிதவின் சிறைக்கூடம் தடை செய்யப்பட்ட பிரதேசம்!

வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே சிறைக்கூடப் பகுதிக்கு இரண்டு சிறைஅதிகாரிகளே நுழைவதற்கு அனுமதி அளி்க்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள், 24 மணிநேரமும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். யோசித ராஜபக்ச, விருந்தினர்களைச் சந்திக்கச் செல்லும் போது, ஒரு சிறை அதிகாரியும் சமூகமளித்திருப்பார். சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல், இவர்கள் சிறைக்கூடத்துக்கு வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

(“யோசிதவின் சிறைக்கூடம் தடை செய்யப்பட்ட பிரதேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

யோசித ஆதரவு கடற்படையினர் இடைநிறுத்தம்!

யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது. டியகமவில் நேற்று நடந்த ரக்பி போட்டியில் விளையாடிய சிறிலங்கா கடற்படை அணியின் வீரர்கள் நால்வர், தமது அணியின் முன்னாள் அணித் தலைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான, யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டிகளை அணிந்திருந்தனர். யோசித ராஜபக்சவின் இலக்கமான 07 என்பதை, YO07 என அவர்கள் தமது கைப்பட்டிகளில் எழுதியிருந்தனர். இதையடுத்து, சிறிலங்கா கடற்படை அணியின் நான்கு வீரர்களும் விசாரணை முடியும் வரை சிறிலங்கா கடற்படைத் தளபதியால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.