வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!

யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் சிலநாட்களின் முன் தெரிவித்துள்ள அதே வேளை, முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

(“வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்

கருணா அணியின் அழுத்தம் காரணமாகவே, பொலிஸாரிடம் தான், மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக, யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான டப்ளியு.எம்.எம்.சஞ்சய பிரித் விராஜ் தெரிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(“கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்” தொடர்ந்து வாசிக்க…)

பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?

ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். எக்னெலிகொட காணாமல்போன வழக்கில், சந்தியா என்னெலிகொட சாட்சியாளர் ஆவார். குற்றவியல் ஏற்பாடுகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று, பாதிக்கப்பட்ட (சந்தியா எக்னெலிகொட) தரப்பின் சட்டத்தரணி கூறினார்.

(“பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?” தொடர்ந்து வாசிக்க…)

புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ச உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் காலாவதியான நிலையிலேயே, இன்று காலை அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். சிறைச்சாலைப் பேருந்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், யோசித ராஜபக்ச, கொண்டு வரப்பட்ட போது நீதிமன்றத்தில் அவரது தந்தையான மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் குவிந்திருந்தனர்.

(“புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவை பின் பின்வரிசைக்கு தள்ளிய பொன்சேகா! அமைச்சு பதவி என்ன?

ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவின் வெற்றிடத்திற்காகவே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆறாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வராத காரணத்தினால் பொன்சேகா அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இதேவேளை மறைந்த குணவர்தனவின் அமைச்சர் பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை எனவும், அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

(“மகிந்தவை பின் பின்வரிசைக்கு தள்ளிய பொன்சேகா! அமைச்சு பதவி என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை ஏகமனதாக ஏற்பு !

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம், போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை, சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை,

(“அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை ஏகமனதாக ஏற்பு !” தொடர்ந்து வாசிக்க…)

விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள். இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசைனிடம் வற்புறுத்த வேண்டும் எனவும் TNAஅமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

(“விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக பிரேரணை

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வின் போது, இரணைமடு நீர்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம், போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

(“வடமாகாண சபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டுத் தொழுவம்

 

இத் தொழுவமானது கால்நடைகளை விஷேடமாக மாடுகளை மழை வெயில் போன்ற காலநிலைகளிருந்து பாதுகாப்பதற்காகவும் அவற்றிற்கான உணவுகளை வீணாக்காமல் பாவிப்பதற்குமாக எமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட குடிலாகும். பனை ஓலையால் வேயப்பட்டு பனம் மட்டைகளால் அடித்தட்டு வடிவமைக்கப்பட்டும் உள்ளது. தற்போதைய சந்ததியினரில் பலருக்கு இது தெரியாமலும் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப சீற், தகரக் கொட்டகைகள் போடப்பட்டாலும் கால்நடைகளுக்கு சுவாத்தியமான இக்குடில்களே சிறந்ததாக உள்ளது. ஏன் எமக்குக் கூட இவ்வாறான இயற்கைப் பொருள் பாவனையே சிறப்பான வாழ்விற்கு இன்றியமையாததாகும்.

(ஊரெழு பார்த்தீபன்)

முதல்வர் அதிரடி! அச்சத்தில் அதிகாரிகள்!

வடமாகாண அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர்கள் கண்டுகொள்ளாதுள்ள போதும், முதலமைச்சர் தடாலடியாக நடவடிக்கைகள் சகிதம் களம் குதித்துள்ளார். அவ்வகையில் முறையற்ற வகையில் அலுலவலக வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தனது பார்வையை செலுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அலுவலக வாகனங்களை தனது குடும்ப தேவைகளிற்கு பயன்படுத்திய அமைச்சின் செயலாளரிற்கு பல இலட்சங்களில் தண்டம் அறவிடப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட பலரிற்கு இவ்வாறு குற்றப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

(“முதல்வர் அதிரடி! அச்சத்தில் அதிகாரிகள்!” தொடர்ந்து வாசிக்க…)