வினைதிறனை வெளிப்படுத்த முதல்வர் முடிவு!!!

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ .சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தமது சார்பாக. வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரதேச செயலகப்பகுதிக்கு ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களே இனிமேல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உரிய அபிவிருத்தி ,ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை சார்பாக முன்னெடுப்பார்கள் எனவும், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை மட்டுமே தம்மிடம் நேரில் முறையிடுமாறும் தெரிவித்துள்ளார். இச் செயற்பாட்டின் மூலம் வடமாகாணத்திற்குட்பட்ட ஒவ்வொரு பிரதேசசெயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறை சார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் அணுகி வட மாகாண சபையால் செயற் படுத்த முடியும் என எதிர்பார்க்கபடுகின்றது..

நல்ல கிராமங்கள் உருவாகட்டும்…

ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியும், சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவ நோக்கு என ஒரு ஆரோக்கியமான சமூகமாக யாழ்ப்பாணம் இருந்தது… இன்று நோய்களும் பெருகி தனியார் வைத்திய நிலையங்களும், தனியார் கல்விநிலயங்களும் நிரம்பிய பிரதேசமாக “வளர்ச்சி” யடைந்துள்ளது…

(“நல்ல கிராமங்கள் உருவாகட்டும்…” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்ப ஏற்பாடு

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

(“இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்ப ஏற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் வடக்கின் முதலமைச்சர்! மஹிந்த ஜனாதிபதி! – கோத்தபாய!

டக்ளஸிடம் ஆயுதங்களை பறித்திருக்காவிட்டால் அவர் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் மஹிந்த இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. சிலோன் ருடே க்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை இழந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழ் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ஈபிடிபி யினரின் ஆயுதங்களைக் களைந்திருக்காவிட்டால் நாம் வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம். நான் அவர்களின் ஆயுதங்களை மீள கையளிக்குமாறு வேண்டினேன். ஆனால் அதற்கான காலம் இன்னும் வரவில்லை என டக்ளஸ் , கருணா போன்றோர் மறுத்தார்கள்.

(“டக்ளஸ் வடக்கின் முதலமைச்சர்! மஹிந்த ஜனாதிபதி! – கோத்தபாய!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இளவரசர் ஹூசைன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றார். இந்த வரிசையில் வட மாகாணத்திற்கு சென்ற அவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் சென்றார் என்பது சிறப்பம்சமாகும். அத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன்போது முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என விக்னேஸ்வரன் மனித உரிமைகள் ஆணையாளரை வேண்டியுள்ளார்.

(“புலிகள் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பதினால் எந்த இனமும் பாதிக்கப்படாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சனியன்று வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீரவு மற்றும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க உதவ வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(“தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் முகாம் மக்களிடம் தெரிவித்தார்.

திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!

தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தின் சில கரையோரப் பிரதேசங்களில் இவ்வருடம் (2016) ஜனவரி மாதத்தின் நடுப் பகுதியில் சுமார் 300 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதும், அவற்றில் பெரும்பாலானவை உயரிழிந்ததும் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரித்தை ஏற்படுத்தின. கடல் வாழ் உயிரினமான திமிங்கிலத்திற்கு என்ன நேர்ந்தது என்று பரவலாகப் பார்க்கப்பட்டதோடு இவ்வாறு உயிரிழந்த திமிங்கிலங்களின் உடல் பாக மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

(“திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உடனான சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

(“புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)