புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் கருத்துக்களை அறியும் பணி நாளை மறுதினம் (13)ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்களை அறியும் நோக்கில் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவொன்றை பிரதமர் நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் இன்று (11)கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர்.

(“புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ள விடயத்திலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக பேரவை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும், சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(“வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
அரசியல் கைதிகளின் விடுதலை
எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் தைப்பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக எடுத்த முடிவு இன ஒற்றுமையை விரும்புகின்றவர்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்துள்ளது. இது தங்களால் விடப்படும் நல்லதொரு சமிக்ஞையாகும். மேலும் எமது நாட்டில் விளங்கும் பல்வேறு மதஙகளால் கொண்டாடப்படும் சமய நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்து அவற்றை தேசிய விழாவாக அனைவரும் அனுஸ்டிக்க அல்லது கௌரவிக்கக்கூடிய வகையில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நான் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

(“ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP

நாடாளுமன்றத்தை, அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் தீர்மானமானது, நிலையியல் கட்டளைகளை மீறுகின்ற செயலாகுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தை நசுக்கி, ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது என, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, குற்றம் சாட்டினார். தனது கட்சி, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடும் என அவர் கூறினார்.

(“அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP” தொடர்ந்து வாசிக்க…)

நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(08) நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(“நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்” தொடர்ந்து வாசிக்க…)

பிரௌன்ஸ்வீக் தோட்ட லயனில் பாரிய தீ

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், இன்று சனிக்கிழமை(09) பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி

அரசியலமைப்பில் கடந்த காலங்களில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவந்தபோது, நாட்டில் ஏற்பட்ட நிலைமையை நான் நன்கறிவேன். கலாசார, தொழில்நுட்ப மற்றும் இதர மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றுவதில் எவ்விதமான தவறும் இல்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றும் இனவாதக்குழுகளிடம் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில், இன்று சனிக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது

ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், புதன்கிழமை (06) மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார்.

(“சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியை கொல்ல முயற்சி: குற்றவாளியை மன்னிக்க ஜனாதிபதி இணங்கினார்

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வழக்கின் பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று வியாழக்கிழமை கொண்டுவந்துள்ளது.

(“ஜனாதிபதியை கொல்ல முயற்சி: குற்றவாளியை மன்னிக்க ஜனாதிபதி இணங்கினார்” தொடர்ந்து வாசிக்க…)

முரண்பட்ட செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முனைப்புக்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!!!!!

வடக்கு மாகாண முதலமைருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க சில தரப்புக்கள் முனைவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுரேஸ் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் முனைப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

(“முரண்பட்ட செய்திகள்” தொடர்ந்து வாசிக்க…)