குடாநாட்டைக் கடல் விழுங்கும் அபாயம்

யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் யாழ். குடாநாடு, கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் வட மாகாண மக்களைத் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“குடாநாட்டைக் கடல் விழுங்கும் அபாயம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர்

தமிழ் இனத்தின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தன். தேசியத் தலைவனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் வேறு ஒருவரும் தலைவனாக இருக்க முடியாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் யாழ்.கிறீன் கிறஸ்ட் விருந்தினர் விடுதியில், கிளை குழு கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் தமிழ் இனத்தின் தேசிய தலைவனாக தந்தை செல்வநாயகம் அப்போது இருந்தார். தற்போது தமிழரசு கட்சியின் பெரும் தலைவனாகவும் தமிழ் இனத்தின் தலைவனாகவும் இரா.சம்பந்தன் இருக்கின்றார்.

அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ?

இந்த அமெரிக்காக்காரனுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வேறை வேலை வெட்டி இல்லையோ? தமிழன் எதைச் செய்தாலும், மற்ற வேலைகளை அப்படியே விட்டு விட்டு, உற்றுப் பார்ப்பது தான் அவர்களுக்கு பிழைப்பாப் போச்சு! தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதை அமெரிக்கா அவதானித்து வருவதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்தியாளர் (?) தெரிவித்துள்ளாராம்.

(“அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ?” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரி-மஹிந்த சந்தித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகைதந்தார். அதன்பின்னரே மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு

வலிகாம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரின் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று(31) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், விடுக்கப்படாத காணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தார்.

(“காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!

த.தே.கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போதும் வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்காமல் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை துரோகிகள்- எதிரிகள் கூட்டு -செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு

எதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

(“தமிழ் மக்கள் பேரவை துரோகிகள்- எதிரிகள் கூட்டு -செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கிறது- சித்தார்த்தன் மறுக்கிறார்.

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கிறது- சித்தார்த்தன் மறுக்கிறார்.” தொடர்ந்து வாசிக்க…)

உயர் பாதுகாப்பு வலயம் விடிவிப்பு

யாழ்ப்பாணம்- உயர்பாதுகாப்பு வலயம் 2ம் கட்டமாக வலி,வடக்கு மற்றும் வலி,கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் நேற்றைய தினம் 29.12.15 மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட் டிருக்கின்றது. வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கலப்பு முறையில் ஜூனில் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் 2016
கலப்பு முறை
தொகுதி வாரி முறை
விகிதாசார முறை
விருப்பு வாக்கு
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

(“கலப்பு முறையில் ஜூனில் மாகாண சபைத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)