அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?
பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29). கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.
37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.

(“மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்” தொடர்ந்து வாசிக்க…)

பாடும்மீன்கள் – கனடா

வருடாந்த பொதுக் கூட்டம்

பாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:

எமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.

(“பாடும்மீன்கள் – கனடா” தொடர்ந்து வாசிக்க…)

மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..

 

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…

(“மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)

கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.

(“கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..” தொடர்ந்து வாசிக்க…)

நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

(“நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

(“புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?” தொடர்ந்து வாசிக்க…)

நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

(“நாம் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் அல்ல ஆனால் ….?” தொடர்ந்து வாசிக்க…)

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்

 

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நினைவு தொடர்பாகச் சகதோழர்கள் கம்பர்மலை பொன் கந்தையா சனசமூகநிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடவிருந்த நூலின் வெளியீடு சாதிவெறி பிடித்த விசமிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அறுபதுகளில் இருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்போடு ஈடுபட்ட தோழரின் பணிகள் குறித்த நூலே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பீடாதிபதியான சாதித் தடிப்பு மிக்க பேராசிரியர் ஒருவரே இதற்குக் காரணம் என ஊர்த்தகவல்கள் கூறுகின்றன. தோழரின் குடும்பமும் இந்தத் தடிப்புப் பேராசிரியருக்கு விலைபோகியுள்ளன. தோழரின் லண்டன் வாசியான மருமகனாரும் பேராசிரியரும் ஒரே மேசைக் குடிகாரர் என்பதால் மருமகனார் வெளியீட்டுக்கு வழக்குத்தாக்கல் செய்வேன் என பேராசிரியரின் தடித்த ஆலோசனையுடன் ஊர்முழுக்கத் தொலைபேசியில் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பணமோகத்தில் திளைக்கும் தோழரின் குடும்பம் தோழர் ஊருக்கே சேவை செய்தார், எங்களுக்கு ஒன்றும் கிழிக்கவில்லை, அவருக்குப் புத்தகம் எதற்கு? என்று கொந்தளித்து எழுகின்றனர். தோழரின் மகன் புத்தகத்துக்கு வரைந்த ஓவியத்துக்கு காவாலியின் ஓவியத்தைப் போட்டதாக லண்டனில் இருக்கும் மருமகன் கடும் வெறியில் தூசணத்தால் தொலைபேசியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கம்பர்மலையில் உள்ள சில சக்திகளும் இந்த வெளியீட்டைக் குழப்பிக் கலாட்டா பண்ண தடித்த பீடாதிபதிப் பேராசிரியரின் கபடத்தனத்துக்குத் துணைபோயுள்ளன. குடும்பத்தினரும் ஒரு கலாட்டாக் கும்பலை பணம் கொடுத்து வெளியீட்டைக் குழப்ப என்று இறக்கியுள்ளனர். நல்ல நோக்கத்திற்காக நூலை வெளியிட முயன்ற தோழர்களின் கை சாதிவெறி பேராசிரியராலும் அவருக்கு அடிவருடுவோராலும் கட்டிப்போடப்பட்டுள்ளன.(Arun Ambalavanar)

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் மூல வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.