சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை 30 வருடங்களின் பின்னர் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் கட்டைப்பறிச்சான் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினையடுத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நேற்று முதல் சம்பூர் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பஸ், சம்பூரிலிருந்து இரவு பத்துமணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை ஆறுமணிக்கு கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தினை வந்தடைந்ததன் பின்னர் அங்கிருந்து வௌ்ளவத்தையில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.
Category: செய்திகள்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, நாளைய தினம் (புதன்கிழமை) கையளிக்கவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வினைத் தொடக்கி உரையாற்றிய போதே, அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்தார்.
(“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)
அத்தனகல அமைப்பாளராக சந்திரிகா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்
கட்சிக்குள் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சாதாரண விடயமென்றும், அதனை ஒருசில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின்போது முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், குறிப்பாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து கட்சிக்குள் கடந்த நாட்களாக பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் தெரிவித்தபோதே, இவ்வாறு குறிப்பிட்டார்.
ரணில் – மஹிந்த இரகசியச் சந்திப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள ‘சண் அன்ட் ஃபண்’ ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இச்சந்திப்பைத் தவிர, வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.
இனப் படுகொலை செய்தது யார்?
2009ல் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைக் கேடயங்களாகப் பாவித்து புலிகள் தாம் தப்புவதற்கு சமயம் பார்த்துக் காத்திருந்த நாட்களில்……
புலம்பெயர்ந்து வந்த தேசங்களில், புலித் தேசியங்கள், தெரு மறிப்புப் போராட்டங்கள் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாள் தற்செயலாக நான் ஒரு புலிப் பிரமுகரை சந்தித்தேன். போராட்டத்துக்கு ஏன் வருவதில்லை? என என்னிடம் கேட்டார். என்ன காரணத்துக்க இந்தப் போராட்டம் செய்கிறீர்கள்? என அவரிடம் வினவினேன்.
‘மக்கள் கொல்லப்படுகிறார்கள். மக்களை காப்பாற்றுவதற்காகத் தான் போராட்டம் நடத்தப்படுகிறது.’ என கூறினார். மக்களைத் தடுத்து வைக்காமல், அவர்களை விடுவிக்கும்படி புலிகளிடம் கூறுங்கள். மக்கள் கொல்லப்பட மாட்டார்கள். புலிகள் மக்களை தடுத்து வைத்திருப்பதை முதலில் கண்டியுங்கள் என அவரிடம் கூறினேன்.
அதற்கு அந்தப் புலிப் பிரமுகர் கூறிய பதில் எனக்கு வியப்பையும், விசனத்தையும் அளித்தது. அவர் கூறியது சனத்தைப் போக விட்டுட்டுப் பொடியள் என்ன செய்யிறது………?
இணைந்து செயற்பட சீனா விருப்பம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க சீனா தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஸியாங்லியாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடல் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்க சீனா விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் கூறிள்ளார். கடந்த 10 வருடங்களில் சுமார் 10,000 இலங்கையர்களை விஞ்ஞானம், முகாமைத்துவம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சீனா பயிற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், 2015ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,000 இலங்கையர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் சீனாவில் கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச சவால்
(மேனகா மூக்காண்டி)
சர்வதேச ரீதியில் பாரியதொரு சவாலுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இலங்கை பாதுகாப்புப் படையினராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, இம்முறை பேரவை கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அமர்வு, இலங்கைக்கு பாரியதொரு சவாலாக மாறியுள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இம்மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையில், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்றே அவ்வறிக்கையின் பிரதியொன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை
இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில்; இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரி சர்வதேச ரீதியில் பாரிய பிரசாரத்தை மீண்டும் முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பிரித்தானியாவின் செனல் 4 நிறுவனத்தின் யுத்த சூனிய வலயம் எனும் திரைப்படத்தை தயாரித்த கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் மற்றுமொரு திரைப்படத்தை வெளியிட தயாராகி வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் இன்று இந்தியா பயணம்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவாரெனத் தெரிய வருகிறது. பிரதமரின் இவ்விஜயத்தின் நிமித்தம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ நட்புறவை முன்னிலைப்படுத்தும் அடையாளமாக இம்முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவிவரும் நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல் லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த் தைகளின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது