யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர்-03:
இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
“மலையமாருதம்” ஓய்ந்து போனது!
பேரிழப்பு!
நண்பன், தோழன், மனிதநேயன், அரசியல் சமூகசெயற்பாட்டாளன் திரு. லோறன்ஸின் இழப்பு ஆறுதல்கொள்ள முடியாதது!!
1975ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சக மாணவனாக சந்தித்ததிலிருந்து 1997இல் கொழும்புக்கு மாற்றலாகி வந்ததுவரை இடையறாது உடன்பாடுகள், முரண்பாடுகளுடனான கருத்துப் பரிமாறல்களுடன், நட்புடன் பழகிவந்தவர் தோழர் லோறன்ஸ் அவர்கள்!
முன்பு ஒருநாள் செய்த வினை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
(என்.கே அஷோக்பரன்)
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும்.
சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா?
சிலை அரசியல் சிந்தாந்த அரசியல்
ஆளுநர்கள் மத்தியின் அரசியல் கருவிகள்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாட்டில் எது நடந்தாலும் அதனை தமது அரசியல் கண்ணோட்டத்தின் படி அல்லது தமது எதிரிக்கு எதிராக பாவிக்கும் நோக்குடன் வியாக்கியானம் செய்வதையே பலர் விரும்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் மூன்று மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பேரை நியமித்த போதும் அதனையே அவதானிக்க முடிந்தது.
மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில்
(புருஜோத்தமன் தங்கமயில்)
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.