(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 01
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன.
The Formula
Political & Sociology Research
என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் “என் சனத்தை போக விடு”
– யாத்ராகமம்
By சிவராசா கருணாகரன்
ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே – திருவாசகம்
(ஏம்.எஸ்.எம். ஐயூப்)
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டில் மிகப் பெரும் பதற்ற நிலைமை நிலவியது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். கொழும்பு காலிமுகத் திடலில் தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. நாடே ஒருவகையில் ஸ்தம்பிதமடைந்து இருந்தது.
(எம்.எஸ்.எம் ஐயூப்)
சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர்.
(சாகரன்)
போத்துக்கீசர் கப்பல் கட்டி வந்தனர். வியாபாரம் என்றனர். ஒன்றாக இருந்த மக்களிடம் நஞ்சை விதைத்தனர்.
எம்மிடையே உள்ளே இருந்த (அரச) தீய சக்திகள் அவர்களுடன் இணைந்தனர் எமது வளங்களை சுரண்டி எடுத்துச் சென்றனர்.
வளம் இருப்பதை கேள்விப்பட்டு ஒல்லாந்தர் வந்தனர். முன்னவரை அடித்துக் கலைத்தனர் அதற்கு நாமும் உதவியாக இருந்தோம்… வந்தவன் சீதேவி என்று நம்பி…?
(எம்.எஸ்.எம் ஐயூப்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது. முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இம்முறையும் அதே காரணத்தால், தேர்தல் ஒத்திவைக்கப்படப் போகிறது.