1979.

(Rathan Chandrasekar)

பொங்கல் திருநாளுக்குப்
பத்து நாள்களே இருக்கின்றன.
அப்போது –
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்படுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினரான
அந்த மக்கள் தலைவர்.
சொன்னால் இப்போதும்
நம்பமாட்டீர்கள்,
துயரில் ஆழ்ந்திருந்த
கீழத்தஞ்சை மாவட்டத்தின்
பெருவாரியான மக்கள்
பொங்கல் விழாவைக்
கொண்டாடாமல் தவிர்த்து,
அந்தத் தலைவனுக்கு
நெஞ்சார்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொண்டார்கள்.
பத்தாண்டுகள் ஊராட்சி மன்றத்தின்
தலைவராக பொறுப்பு வகித்தபோது –
அவர் வாழ்ந்த இடம்
ஒரு எளிய குடிசை வீடு.
பத்தாண்டுகள் ஊராட்சி ஒன்றியப்
பெருந்தலைவராக பதவி வகித்தபோதும்
அவர் வாழ்ந்த இடம்
அதே குடிசை வீடு.
பின்னாளில் –
நாடாளுமன்ற உறுப்பினராக
செயலாற்றிய காலத்திலும்
அவர் வாழ்ந்தது
அதே குடிசை வீட்டில்தான் !
இந்தியாவின்
543 நாடாளுமன்ற உறுப்பினர்களில்
குடிசையில் வாழ்ந்த ஒரே எம்.பி !
தன் சொந்த சேமிப்புக்கென
ஒரு வங்கிக்கணக்கும்கூட இல்லாத
ஒரே எம்.பி.யும்
இவராகத்தான் இருந்திருக்க முடியும்!
நம்புவதற்குக்கூட இப்போது
கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா!
‘அட அப்படியா;
நம் மாநிலத்தில் இவ்விதம் ஒருவர் வாழ்ந்தாரா!!’
என வியக்கும் பல வரலாற்று நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்டிச் சென்ற தோழர்.
இன்று-
ஜனவரி 6
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின்
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்
எஸ்.ஜி.முருகைய்யன்
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.

எஸ்.எல்.எம்.ஹனிபா பச்சோந்தியான கதை தொடர்2..

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது பின்வந்த காலங்களில் எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது மகத்தான ஆளுமையும் மகோன்னதமான பங்களிப்புகளும் வரலாற்றில் ஒருபோதும் இருட்டடிப்புச் செய்ய முடியாதவை.

உண்மை உறங்குகிறது!

(Maniam Shanmugam)

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் காலத்துக்காலம் உருவான தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு முதலில் ‘அகிம்சை’ வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியும் எவ்வித விடிவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அழிவைத்தான் கொண்டு வந்தார்கள்.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை தொடர் 1 ..

அஷ்ரப் அவர்கள் மறைந்ததும் சில நாட்களின் பின்னர் ‘எங்கள் தேசம்’ பத்திரிகையில் ‘அஷ்ரப் – சில நினைவுகள்’ என்று வாரா வாரம் ஒரு கட்டுரைத் தொடரை எழுதுகிறேன்.

சுரண்டிப் பார்க்க ஒரு தருணம்

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தமது பலத்தை சுரண்டிப் பார்ப்பதற்கு முன்னர், தமக்கேற்ற சுற்றுவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலுக்குச் செல்லும். எதிர்பார்த்ததைப் போல மக்கள் ஆணை கிடைக்காவிடின், அடுத்தடுத்த தேர்தல்களுக்குச் செல்வதை காலந்தாழ்த்திவிடும்.

2023 கைகொடுக்குமா?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்,  இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும். 

புகாரி விதானையார்

நேற்றுப்போல் இருக்கிறது.. இன்றுஎங்கள் தலைவர் புகாரி விதானையார் புலிகளால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தினம்.
அன்று காலையில் என்ன நடந்தது?

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது

(புருஜோத்தமன் தங்கமயில்)

அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். 

பங்களாதேஷ் இனப்படுகொலை

1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற இனப்படுகொலையானது, 1951 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான பேரவையை அமல்படுத்திய பின்னர் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மிக முக்கியமான குற்றமாகும்.