பொங்காத பொங்கல்!

(வீ.ஏ.கந்தசாமி)

(தைப்பாங்கல் தினத்தை முன்னிட்டு, 56 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரை, இலங்கையின் இன்றைய நிலைமைக்குமான பொருத்தப்பாடு கருதி பிரசுரமாகின்றது)

மக்களின் உற்பத்திக்கான போராட்டத்தில் உதித்தது பொங்கல் தினம். உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட, சமுதாய நடைமுறையின் வெளிப்பாடாக முன்வந்த பொங்கல் தினம், தமிழர் சமுதாயத்தின் தனித்துவமான தினமாக உயர்ந்து நிற்கிறது.

எமது தேசிய கீதத்தை இயற்றிய அமரர்.ஆனந்த சமரக்கோன்

எமது தேசிய கீதத்தை இயற்றிய
அமரர்.ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஜனனதினம் இன்று.
(13.01.1911)


எமது தேசிய கீதத்தின் வரலாற்று
காலப்பகுதியை இப்படி வகுக்கலாம்.
1948.ஆம். நமது நாடு சுதந்திர அடையும்
வரை இலங்கையின் தேசிய கீதமாக
God save that queen….. என்று தொடங்கும் பிரித்தானிய தேசிய கீதமே
நமது நாட்டின் தேசியகீதமாக இருந்தது.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 5

வடக்குகிழக்கு மாகாண சபையில் ஓர் உறுப்பினராகச் செயற்பட்டு வந்தேன். அந்தச் சபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைத்தது போல எனக்கும் ஒரு பஜிரோ ஜீப் கிடைத்தது. அதை நான் குறுகிய காலத்துக்குள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதை விற்று விட்டேன். அது இலங்கையில் ஒன்றும் புதினமான விஷயமோ பாரியதொரு குற்றமோ அல்ல. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் வாகனங்களை விற்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளில் நானும் ஒருவன், அவ்வளவுதான்.

23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு

(எம்.எஸ்.எம் ஐயூப்)

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 04

அந்தக் காலகட்டத்தில் இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறது. உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்த சிறிமாவோ அம்மையாரின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் அவர் சந்திக்கின்ற முதலாவது பொதுத் தேர்தல் அது.

மக்கத்துச் சால்வை எஸ்.எல்.எம். ஹனீபா பச்சோந்தியான கதை – 03


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கட்ட வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது அஷ்ரப் அவர்கள் விட்டுள்ள சில அடிப்படையான தவறுகளை அவதானிக்கலாம்.

மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். 

1979.

(Rathan Chandrasekar)

பொங்கல் திருநாளுக்குப்
பத்து நாள்களே இருக்கின்றன.
அப்போது –
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்படுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினரான
அந்த மக்கள் தலைவர்.
சொன்னால் இப்போதும்
நம்பமாட்டீர்கள்,
துயரில் ஆழ்ந்திருந்த
கீழத்தஞ்சை மாவட்டத்தின்
பெருவாரியான மக்கள்
பொங்கல் விழாவைக்
கொண்டாடாமல் தவிர்த்து,
அந்தத் தலைவனுக்கு
நெஞ்சார்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொண்டார்கள்.
பத்தாண்டுகள் ஊராட்சி மன்றத்தின்
தலைவராக பொறுப்பு வகித்தபோது –
அவர் வாழ்ந்த இடம்
ஒரு எளிய குடிசை வீடு.
பத்தாண்டுகள் ஊராட்சி ஒன்றியப்
பெருந்தலைவராக பதவி வகித்தபோதும்
அவர் வாழ்ந்த இடம்
அதே குடிசை வீடு.
பின்னாளில் –
நாடாளுமன்ற உறுப்பினராக
செயலாற்றிய காலத்திலும்
அவர் வாழ்ந்தது
அதே குடிசை வீட்டில்தான் !
இந்தியாவின்
543 நாடாளுமன்ற உறுப்பினர்களில்
குடிசையில் வாழ்ந்த ஒரே எம்.பி !
தன் சொந்த சேமிப்புக்கென
ஒரு வங்கிக்கணக்கும்கூட இல்லாத
ஒரே எம்.பி.யும்
இவராகத்தான் இருந்திருக்க முடியும்!
நம்புவதற்குக்கூட இப்போது
கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா!
‘அட அப்படியா;
நம் மாநிலத்தில் இவ்விதம் ஒருவர் வாழ்ந்தாரா!!’
என வியக்கும் பல வரலாற்று நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்டிச் சென்ற தோழர்.
இன்று-
ஜனவரி 6
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின்
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்
எஸ்.ஜி.முருகைய்யன்
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.

எஸ்.எல்.எம்.ஹனிபா பச்சோந்தியான கதை தொடர்2..

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது பின்வந்த காலங்களில் எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது மகத்தான ஆளுமையும் மகோன்னதமான பங்களிப்புகளும் வரலாற்றில் ஒருபோதும் இருட்டடிப்புச் செய்ய முடியாதவை.

உண்மை உறங்குகிறது!

(Maniam Shanmugam)

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் காலத்துக்காலம் உருவான தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு முதலில் ‘அகிம்சை’ வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியும் எவ்வித விடிவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அழிவைத்தான் கொண்டு வந்தார்கள்.