தோழர் றொபேட் (த.சுபத்திரன்) 67 ஆவது பிறந்த தினம்


(தோழர் மோகன்)

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காத்திரமாக செயலாற்றிய தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களது 67 வது பிறந்த தினம் 24.12.2024 இன்றாகும்.

தோழர் றொபேட்

(தோழர் சுகு)

“நான் பிறந்தது பாலன் பிறந்த நேரத்திலாக்கும் “என்று நகைச்சுவை உணர்வுடன் பெருமிதம் கொள்வார்
இன்று அவரது 67வது அகவை நாள்
இலங்கையின் 76ஆண்டு சரித்திரத்தின் திருப்பு முனையில் தோழர் சுபத்திரன் ரஞ்சன் றொபேர்ட்டை நினைவு கூரல்.

விஏகே வாழ்வும் மறைவும்


(தோழர் சுகு)

04/12/24-09/11/92
தோழர் வி ஏ கே 100வது ஜனன தினம் டிசம்பர் 4
“2024 டிசம்பர் 4 அவரது நூறாவது ஜனன தினம்
” 2024 இல் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் தோழர் வி ஏ கந்தசாமி அவர்களின் கனவுகள் மெய்ப்படுவதற்கான தருணங்கள். வாழ கிடைத்திருந்தால் அவர் பரவசம் அடைந்திருப்பார் அப்படியான மனம் அவரது”
“இங்கிலாந்து ஹைட் பார்க் இடுகாட்டில் கார்ல்மார்க்ஸின் நிரந்தர உறக்கம் போல

தமிழ் பேசும் மக்களின் சகோதரத்துவத்தை தாங்கிச் சென்ற பெருமகனார் சேகு இஸ்ஸதீன்


(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் மக்களின் முன்னோக்கி நகர்விற்கான விடயங்களில் சேகு இஸ்ஸதீனை மறந்து தவிர்த்து நாம் பேச முடியாது..

அவர் வாழும் காலத்திலும் வாழ்ந்து மறைந்த காலத்திலும் அவரின் வரலாறு இதனைத்தான் பேசி நிற்கின்றது.

ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?

(மொஹமட் பாதுஷா)

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்தான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்களை விட, ஏனைய கட்சிகளுக்கு புள்ளடியிட்ட வாக்காளர்களின் கூட்டுத்தொகை அதிகமாகும்.

அனுர- நேர்மையான இடது சாரியம்?

“சுயநிர்ணயம் என்பது ஒரு மாக்சிச கருத்து நிலை. இதனை வளர்த்தெடுத்தவர் லெனின். இந்தக் கருத்து நிலையிலும் மாக்சிச கோட்பாட்டின் அடிப்படையிலும் இயங்குபவர் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி. தமிழர்களும் சுயநிர்ணயத்தினை முன்வைப்பவர்கள் அதற்காகப் போராடியவர்கள். ஆகவே தமிழர்கள் ஒத்த கருத்துடையவர்களுடன்தான் இணைய வேண்டும். அவ்வாறானால்தான் வெற்றியும் அடைய முடியும். 

யாழ் தமிழ் தேசியவாதக் கோட்டைக்குள் பலமாக அடித்த “அநுர அலை”


(டி.பி.எஸ். ஜெயராஜ்)
தேசிய மக்கள் சக்தி 2024 நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி.) பிரதான அங்கத்துவக் கட்சியாகக்கொண்டு 21 அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உளாளடக்கிய ஒரு கூட்டமைப்பே தேசிய மக்கள் சக்தியாகும்.

சமாதானத்திற்கான போரரசியல் – 6

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

2001இல் புதிதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது. முன்னைய குமாரதுங்க அரசாங்கம் தொடங்கியதைத் தொடர்வதற்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்தார்.

மறுமலர்ச்சி யுகத்தில் உருவான புதிய அரசியல் கலாசாரம்

கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.

தேர்தல் முடிந்தது:இனிச் செய்ய வேண்டியது என்ன

(எம். ஏ. நுஃமான்)

யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது.