தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா?

தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஜூலை 9 உம் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்களும்

இலங்கையை பொறுத்தவரையில் கறைபடிந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 2022 ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் பேசப்பட்ட பல சம்பவங்கள் பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் பதிவாகியுள்ளன.  

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இன்னல்களைப் பார்க்குமிடத்து, இந்த நவீன காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றதா என, பலரும் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர்.

ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’

(என். கே அஷோக்பரன்)

‘சிஸ்டம் சேஞ்ச்’  (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே! 

தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல்

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும்

(எம். எஸ். எம் ஐயூப்)

இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா?

(என்.கே. அஷோக்பரன்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார்.  ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம்.

பயஸ் மாஸ்டர்

1970களில் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு இணைந்து கொடி விட்ட பயஸ் மாஸ்டர் எனும் இன்னுமொரு கொடி சாய்ந்து விட்டது. திருகோணமலையிலும் யாழ்ப்பாண முற்றவெளியிலும் இலங்கையின் எதிர்காலம் குறிப்பாக தமிழர்களின் எதிர்காலம் பற்றி உரையாடியவைகள் ஒரு படம் போல் மனத்திரையில் ஓடுகின்றன. ஆழ்ந்த கவலைகள் நெஞ்சில். அமைதியாக உறங்கிடு நண்பா – அ. வரதராஜப்பெருமாள்

மரண அறிவித்தல்:-திரு.பயஸ் மாஸ்ரர் (சுமதி மாஸ்ரர்) பயஸ் அன்ரன் கிறிஸ்தோப்பர் அவர்கள் 07.08.2022ல், தென்ஆபிரிக்கா நாட்டில்-சுகயீனம் காரணமாக இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்ட இவர், எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராட்ட வழிகாட்டிகளில் ஒருவர். 1969ல் தென்னிலங்கை பல்கலைகழக மாணவராக நுழைந்தபோது , தென்னிலங்கையில் ஏற்பட்ட இடதுசாரிய முத்திரையுடன் ஏற்பட்ட சிங்கள இளைஞர்களின் சேகுவோரா புரட்சியின் தாக்கத்தாலும், புரட்சியை முன்னெடுத்த சில சிங்கள பல்கலைக்கழக இளைஞர்களின் தொடர்பாலும் ஈர்க்கப்பட்டு, பிற்காலத்தில் எமது தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கும் ஆயுத போராட்டமே ஒரே வழியென தேர்ந்தெடுத்தார்.

இதனை இளைஞர்களை இடதுசாரி கொள்கையில் அணிதிரட்ட வழி தேடினார். இந் நிலையில் பல்கலைக்கழக பட்டதாரியாகிய நிலையில் 1976ம் ஆண்டு மட்டில், பட்டதாரி ஆசிரியராக முதல் முதலில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்தார். அங்கு அமரர் தங்கத்துரை எம்.பி அவர்களின் உதவியுடன் காலூன்றினார்.

அங்கிருந்தே இளைஞர்களை அரசியலை நோக்கி சிந்திக்க தூண்டினார்.தொடர்ந்து திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரிக்கு மாற்றலாகி வந்தநேரம்- ஜெயச்சந்திரன்(பார்த்தன்), ஜான் மாஸ்ரர்(காந்தன்),சார்ல்ஸ் அன்ரனி(சீலன்), றோஸ்மைக்கல், போன்ற துடிப்பான சில இளைஞர்கள் கல்வி பொதுதராதர சாதாரணம் மற்றும் உயர்தரம் என்ற நிலையில் கல்வி கற்றுவந்தனர்.

இந்நிலையில், இவ்வாறான இளைஞர்களை அடையாளம் கண்டு எமது விடுதலைப் பாதைக்கு இழுத்து வந்தவரும் இவரே. பிற்பட்ட காலங்களில் இவர் அடிக்கடி என்னுடன் உரையாடும் போது சொல்வார் ‘ தான் திருமலைக்கு வந்து முதலில் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் இருவரில்- ஒருவர் ஜெயச்சந்திரன் புளொட் இயக்கத்தின் முன்னிலைப் போராளியாகி – ராணுவ தளபதியாகி வீரமரணம் அடைந்தார். மற்றவர் சால்ஸ்அன்ரனி புலி இயக்கத்தின் முன்னிலைப் போராளியாகி,ராணுவ தளபதியாகி வீரமரணம் அடைந்தார்.

எனவே இவ்வாறான திறமைசாலிகளை கண்டுபிடித்து , விடுதலைக்கு இழுத்துவிட்ட எனக்கு இன்னும் எமது மக்களுக்கான போராட்டத்திற்கும், இவர்களின் தியாகங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என மனம் திறந்து பேசுவார். இவ்வாறாக எமக்கு தெரிந்த, இவரோடு நாம் பயணித்த, கடைசி காலங்கள்வரை இவரின் தொடர்புகளை பேணியவர்களில் நானும் ஒரு வரலாற்று சாட்சியாக உள்ளேன்.

மரணம்வரை இவர் தொடர்ந்த தொடர்புகளும், கல்வியும், அரசியல் சித்தாந்தங்களும் பல படிப்பினைக்கும் ஆய்விற்கும் உட்பட்டது. எமது தமிழ் தேசியத்திற்காக சிந்தித்து- செயலாற்றி- அணிதிரட்டி-வழிவகுத்து எமது போராட்டத்தை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர் 1980ற்கு பிற்பட்ட காலங்களில், தலைமறைவாகி, சேகுவோரா போல் சர்வதேச புரட்சியை தேடி நடைபோட்டு, தென்னாபிரிக்கா புரட்சிவரை தன்னை இணைத்துக் கொண்டவர்.

நாடுகள், நிறங்கள்,இனங்கள் மாறி வாழ்ந்தாலும், தான் பிறந்த மண்ணையும் மக்களையும், எம்மைப் போன்ற மாணவர்களையும், அபிமானிகளையும் என்றும் தொடர்பில் நிலைநிறுத்தி, எமது விடுதலை உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்த எமது மதிப்பிற்குரிய, வரலாற்று நாயகன் இன்று எம்முடன் இல்லை.

எனினும் உங்கள் அத்திவாரமான ஆழமான வரலாறு நாம் உள்ளவரை எம்மோடு பயணிக்கும். சென்று வாருங்கள் பயஸ் மாஸ்ரர்……விடை அறியா விடை தருகின்றோம் சென்று வாருங்கள்!இவரின் இறுதி நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில், 12.08.2022 நடைபெறும்!இவரின் இழப்பு செய்திகள், அவரின் இரு பிள்ளைகளால் இவரின் தொலைபேசி இலக்கத்தினூடாக எம்மைப் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை உங்களுடன் பகிர்கின்றோம்!

(ஜெ.ஜென்னி)