(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள்.
The Formula
Political & Sociology Research
(By முரளி, முன்னாள் புலி உறுப்பினர்)
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”
(என். கே அஷோக்பரன்)
கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்!
(புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.