பொய் பொய் பொய்

(என்.கே.அஷோக்பரன்)
இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

மக்கள் போராட்டம் வெல்லட்டும்

உறவுகளே கீழுள்ள இணைப்பை சொடுக்கி தங்கள் ஆதரவை தெரிவியுங்கள். முக்கியமான அரசியல் கோரிக்கையிற்கான போராட்டம் இது

https://forms.gle/vqp3Np16cGEGZhFh6

நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை

(புருஜோத்தமன் தங்கமயில்)

எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது.

நீதி பலவாயின் நாட்டை நிமிர்ந்தெழச் செய்வது கடினமாகும்

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் எதற்கு, அதைச் சாப்பிடமுடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, ஸ்திரமான ஆட்சியொன்று இருக்கிறதா, ஜனநாயகம் பேணப்படுகிறதா? என சர்வதேசமும் சர்வதேச நிறுவனங்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என பதிலளித்தார்.

“மக்களே பொறுப்பாளர்கள்” என்ற பசிலின் வாதம் சரியானதே!

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, அதனை அறிவிப்பதற்காக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றில், ஒரு கருத்தைத் தவிர ஏனைய அத்தனையும் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் பின்னடிக்கும் சீனா

இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு கடனுக்கு மேல் ​கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது.

நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது.

தியாகிகள் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

சேய் குவேராவை பொலிவியாவில் வைத்து கொலை செய்து அவரின் போராட்ட வாழ்வை முடிவிற்கு கொண்டவராவிட்டால் இன்னும் பல நாடுகள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை பெற்றிருக்கும். அதற்கான முன்னெழுச்சிகளை அவர் தனது விடுதலைப் பயணம் மூலம் ஏற்படுத்தியிருப்பார்.

நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும்.