(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அதனை அறிவிப்பதற்காக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றில், ஒரு கருத்தைத் தவிர ஏனைய அத்தனையும் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும்.
The Formula
Political & Sociology Research
(என்.கே. அஷோக்பரன்)
ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.
தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.