(இதை எழுதியவர் யார் என்று தெரியாது. ஓரளவு உண்மை போல தெரிகிறது. அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றி. நான் ஒன்றும் ‘சுத்த சைவம்’ கிடையாது. முடிந்த வரை சைவமாக இருக்க ஆசைப்படுபவன். அவ்வளவே. படியுங்கள், உங்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொண்டால் அதன்படி நடவுங்கள்.)
இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.
அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.