பற்குணம் A.F.C (பகுதி 70 )

1978 ம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கி ,விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை உருவானது.இதில் பேசிய ஜே.ஆர் இந்த ஜனாதிபதி ஆட்சி முறையில் ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மட்டும் மாற்றமுடியாது.மற்ற சகல விசயங்களையும் செய்ய முடியும் என்றார்.பிரதமர் பதவியைக்கூட கேவலமாக விமரச்சித்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 70 )” தொடர்ந்து வாசிக்க…)

பாவமன்னிப்பா? பரிகாரமா?

(கருணாகரன்)

செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார்.

(“பாவமன்னிப்பா? பரிகாரமா?” தொடர்ந்து வாசிக்க…)

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிகாரப் போட்டியின் பின்ணி என்ன…?

உடுவில் மதக் குழுக்களிடையேயான அதிகாரப் போட்டியில் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் மாணவிகளான நிர்மலா ராஜசிங்கம் போன்றவர்களும் கையெழுத்துப் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சிராணி மில்ஸ் யை மீண்டும் அதிபராக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

(“உடுவில் மகளிர் கல்லூரியின் அதிகாரப் போட்டியின் பின்ணி என்ன…?” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(31)

(மாங்குளம் பெண்ணுக்கும் அபயமளித்த கிருஷ்ண பரமாத்மா )

1990களின் பின் புலிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

1.புலிகளின் உயர்மட்ட தலைவர்கள், அரசியல், புலனாய்வு பிரிவினர். போர் படையனிகளின் தளபதிகள், காவல்துறையினர், நிதிதுறையினர், நீதிதுறையினர், நிர்வாக சேவையினர் என ஊருக்குள் புலிகள் என்ற பெயரில் திரிந்தவர்கள்.

2.தாக்குதல் படையணிகளை சேர்ந்த ஊருக்குள் அவ்வளவாக தென்படாத போராளிகள்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(31)” தொடர்ந்து வாசிக்க…)

“சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக செயற்படுவோம்“ – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவிப்பு

சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக –
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ என்ற அரசியல் அமைப்பொன்றினூடாக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். இதன் மூலம் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் அடைவதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்க முடியும். சமவேளையில், எமது மண்ணின் வளர்ச்சியையும் பண்பாட்டுச் செழுமையையும் முன்னெடுத்துச் செவ்வோம் எனத் தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

(““சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக செயற்படுவோம்“ – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சமூகப் போராளிகளை நினைவுகூரும் வகையில் கார்ல்மார்க்ஸ் முதல் வெண்மணி வரை குழந்தைகளுக்கு கம்யூனிஸ பெயர்கள்: கொள்கைப் பிடிப்புடன் திகழும் வன்னிவேலம்பட்டி கிராமம்

(ரா.கோசிமின்)

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமம்.மதுரை மாவட்டத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக கம்யூனிஸ கொள்கைப் பிடிப்புடன் உள்ளனர். அதன் வெளிப்பாடாக தங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்யூனிஸ இயக்கப் போராளிகளின் பெயர்களைச் சூட்டி அழகு பார்க் கின்றனர்.

(“சமூகப் போராளிகளை நினைவுகூரும் வகையில் கார்ல்மார்க்ஸ் முதல் வெண்மணி வரை குழந்தைகளுக்கு கம்யூனிஸ பெயர்கள்: கொள்கைப் பிடிப்புடன் திகழும் வன்னிவேலம்பட்டி கிராமம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(30)

(1995களியேயே ஆரம்பித்த புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு)

புதிய ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு புலிகள் ஈழப்போர் III தொடங்கியபோதே அவர்கள் தமது படையணிகளில் ஆளணி பற்றாக்குறையை உணரத்தொடங்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(30)” தொடர்ந்து வாசிக்க…)

சுதந்திரம் என்னும் பெருநெருப்பு

(அ. ராமசாமி)

‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே’ என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.

(“சுதந்திரம் என்னும் பெருநெருப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் – பகுப்பாய்வு 4.

தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி
சிவத்தம்பி ஐயா என் அயலவர். என் முதற்கவிதை
தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம
விருந்தினர். கொழும்பில் பல தடவைகள்
அவர் வீடுபோய் பேசியிருக்கிறேன்.
ஒரு நடிகனுக்குரிய Resonant குரல் அவருடையது.
அவர் ஒரு நல்ல நாடக நடிகனும். அவரது
மிகப்பெரும் பலமாக நான் கருதுவது அவரின் Resonant voice
தான். ( U tube ல் அவரின் குரலை கேட்டு பாருங்கள் சொக்கிப்போய்விடுவீர்கள்.)
ஐயா பாதி அப்பாவி; மீதி ராஜ தந்திரி.
கைலாசபதி போல ஐயாவிடம் பொம்புளைக் களவுபோன்றவை இல்லை.
ஐயாவுக்கு தனது பணக்கார மனைவி
ருபா அம்மாவில் பயம்.
பின்வருவது தேசம்நெட்டில் அவர்
உயிரோடிருந்தபோது நான் எழுதினது.

(“வாரம் ஒரு ஆய்வாளர் – பகுப்பாய்வு 4.” தொடர்ந்து வாசிக்க…)

அகாலம் ……….!

சிங்கள மக்களை எமது எதிரிகளாக நினைக்கும் வண்ணம் இயக்கத்தால் போதித்து வளர்க்கப்பட்டவர்களின் எழுத்துக்களும் இன்னும் அதைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றன..சிங்கள மக்கள் பலரிடம் காணப்படும் வாஞ்சையையும் ,மனிதாபிமானத்தையும் பல தருணங்களில் அனுபவித்து உணர்ந்தவள் நான்..தமது இனமக்களிடையே பலவித சாதிப்பிரிவினைகள் ….பாகுபாடுகள் காட்டும் …சுயநலம் கொண்ட கீழானவர்களும் எம்மினத்துக்குள் இருப்பதை இத்தகையோர் எழுத மறுப்பதேன்… எனது ”அகாலம் ” நூலில் சில சிங்கள மக்களிடம் நான் கண்ட மனதுவக்கும் சம்பவங்களைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்..அதில் ஒரு சம்பவம் அகாலத்தில் இருந்து

(“அகாலம் ……….!” தொடர்ந்து வாசிக்க…)