‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

(என்.கே. அஷோக்பரன)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள்.

சுறுக்கர் என்ற நடு நிலையாளர்

(சாகரன்)

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த தியாகராஜா இராஜராஜனின் மரணம் எதிர்பாராத பேரதிர்ச்சி. கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.

முகநூலில் எனது பதிவு……

(முகநூலில் வந்த பதிவொன்றின் தமிழ் ஆக்கம்)

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் என்னிடம் “இந்தப் போராட்டம் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எதுவும் மாறாது” .

அவர்களுக்கு, நான் சொல்ல விரும்புவது இதுதான்:

நிபுணர்களும் தடுமாறும் நிலை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

சிலவேளைகளில் வரலாறு விசித்திரமானது; சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும், இன்று அதே தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விந்தையானது.

தம்பியை உரையில் காப்பாற்றும் தமையனின் இறுதி முயற்சி

நெருக்கடியான நிலைமையில், அரச தலைவரொருவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ஒவ்வொருவரும் காதுகொடுப்பர். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் கூர்ந்து அவதானிக்கும். நெருக்கடி, யதார்த்தம், மீண்டெழுதல், தூரநோக்கு, உதவிக்கரம் உள்ளிட்டவை பொதுவான சாராம்சமாக இருக்கும்.

70களில் சபிக்கப்பட்ட சிறிமாவின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சி!

(என்.சரவணன்)

‘பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை விவசாய நிலங்களாக்குவதே எமது அரசாங்கத்தின் இலக்கு’

என்று சொன்னவர் சிறிமா. பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க 1974ஆம் ஆண்டு ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வேளை ஒரு புறம் அவருக்கு எதிரான பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதே வேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவுக்காக வந்திருந்த சிறிமாவின் பேச்சில் இருந்த தேசிய விவகாரங்கள் கவனிக்கத்தக்கவை.

எனது பார்வையில் ‘கோல் பேஸ்’ போராட்டமும் – இடைக்கால தீர்வு பொறிமுறையும்!

(Ramachandran Sanath)

‘கோல் பேஸ்’ வருவார்கள், கொடிகளைத் தூக்கிப்பிடித்து, ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷம் எழுப்புவார்கள், ஓயமாட்டோமென சூளுரைப்பார்கள், ‘செல்பி’ எடுத்து மகிழ்வார்கள், படங்களை வலைத்தளங்களில் பதவிவேற்றம் செய்து பரவசம் அடைவார்கள், பொழுது சாய்ந்ததும் சென்றுவிடுவார்கள், நாமோ வென்றுவிடலாம்.

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம்

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும். 

மகிந்தவின் பேச்சின் சாரம்சம்.

யுத்த வெற்றி பற்றிய தம்பட்டம் மட்டுமே. தம்மால் சுவீகரிக்கப்பட்ட அரச சொத்து பற்றியோ ஒவ்வொரு அபிவிருத்தி என்ற பெயரில் அனுமானிக்கப்பட்ட திட்டங்களில் கபளீகரம் செய்யப்பட்ட சொத்துக்கள் பற்றிய சுயவிமர்சனம் எங்கே? பாராளுமன்ற அரசியலை காப்பாற்றி தனது குடும்ப ஜனநாயகத்தினை காப்பாற்ற போகின்றாராம்.

கோட்டாவின் விடாப்பிடி கொடாப்பிடி

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது.