கறையான்களும்! கருநாகங்களும்?

என் மீது விமர்சனம் மட்டுமல்ல திட்டுகள் சேறுபூசல்கள் வசைபாடல் என வரிசைகட்டி வரும் என்ற பயம் இன்றி, என் மனதில் சரி என பட்டதை பதிவு செய்கிறேன். சினிமா ஒரு சாக்கடை என விமர்சித்த எழுத்து சித்தர் ஜெயகாந்தன் தானும் அதில் இறங்கியபோது வந்த விமர்சனத்துக்கு கூறிய விளக்கம் நான் சாக்கடையை சுத்தம் செய்ய வந்தேன் என்பதே. யாருக்காக அழுதான்? சிலநேரங்களில் சில மனிதர்கள்! ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள்! என தொடர்ந்த அவரின் சாக்கடை சுத்திகரிப்பு சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு ரஜனிகாந்தின் கபாலி வரை பதில் இல்லை. கூவம் ஆற்றை சுத்திகரிக்கும் செயலுக்கு ஆன்மீகவாதியான சத்திய சாயி பாபா, நாத்திகவாதியான கலைஞர் கருணாநிதி வீட்டு படியேறி கொடுத்த கோடான கோடி பணம் அதை சாதிக்காது, தன்னை கடந்து செல்லும் பயணிகள் தம் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலையில்  இன்றும் நாறிக்கிடக்கிறது.

(“கறையான்களும்! கருநாகங்களும்?” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(29)

(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)

முல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்– ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(29)” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் ஒழுக்க வரலாறு

(எழுகதிரோன்)

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்னஇ 800 பக்கங்களில்prabakaran ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் “பிரபாகரன் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்” என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இதுவரைகாலமும் பிரபாகரனின் கேவலமான சரணடைவால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கிடந்த பலரது வாய்க்கு சுக்குத்தண்ணி கிடைத்து இருக்கின்றது.

(“பிரபாகரனின் ஒழுக்க வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(28)

(அச்சுறுத்தப்பட்ட மாணவர்களும் மக்களும்.)

விமானத் தாக்குதல் நிகழ்தமையை அடுத்து அங்கு சென்ற பெற்றோரின் வேதனைகள் சொல்லிடங்காதவை. கணவனை இழந்து தனது வருமானத்தில மூன்று பிள்ளையை வளர்த்த விசுவமடு தாய் தனது மூத்தபிள்ளைக்கு ஒன்றும் ஆகிவிடாக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டு தேடினார். உயிரற்று கிடந்த மகளை துக்கி எடுத்து அழுது புலம்பியபடி வீடு கொண்டு செல்ல அந்த தாய் முயன்றமை மிக கொடுமையான காட்சியாக இருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(28)” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரன், ஜேஆர் போன்றவர்களின் தனிமனித ஒழுழுக்கம்

தனி மனித ஒழுக்கத்தை முழுமையாக கடைப்பிடித்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.தன் வாழ்வின் இறுதி நாட்களின் சுகவீனமுற்று சில நாட்கள் வைத்தியசாலையில் இருந்தார்.அப்போது தன் வைத்தியரிடம் தான் திருமணமாகிய பின் மனைவியை விட்டு பிரிந்து இருக்கவில்லை .எனவே நான் வீட்டுக்கு செல்லவேண்டும்,நான் ஹெலீனாவை விட்டு இறுதி நாட்களிலும் பிரிந்திருக்க விரும்பவில்லை என்று கூறி வெளியேறினார்.அவர் புகைபிடிக்கும் பழக்கமோ மது அருந்தும் பழக்கமோ இல்லாதவர்.இலஞ்ச விவகாரங்களில் சிக்கியதாகவும் தகவல்கள் இல்லை. இவரின் இந்த பண்புகளை வைத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நல்ல தலைவர் என்று பெருமையாக கூற முடியுமா…?

(Vijay Baskaran)

Uduvil Girls College – Shiranee’s Nightmare

[Cartoon – Shiranee is calling for help from Kala, a fellow teacher hardly qualified to be vice principal to help her deal with her dead-drunk husband addicted to raw arrack and Urumpirai kassippu. An excuse to indulge could even be to take this stuff to get rid of common cold!]

(“Uduvil Girls College – Shiranee’s Nightmare” தொடர்ந்து வாசிக்க…)

நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.

ஏதாவது ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற நிலை வரும்போதெல்லாம் புதிதாக ஒன்று தோன்றி அவர்களின் அரசியலை நீடித்துக்கொண்டே போகின்றதே!

(“நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

Road to Nandikadal

என் நட்பு வட்டத்தில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் என்னை ஒரு துரோகி என்று சித்தரித்துக்கொண்டு திரிவார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு சிறிய பதிவு. கமால் குணரட்ண தனது புத்தகத்தில் பிரபாகரனை புகழ்ந்துள்ளார் என்று புலி ஆதரவாளர்கள் அனைவரும் புகழந்து வருகிறார்கள் சிங்களவனே புகழ்ந்துள்ளான் என்று செய்திகளும் பதிவுகளும் கணக்கற்று கிடக்கிறது.

(“Road to Nandikadal” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(26)

(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)

இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(26)” தொடர்ந்து வாசிக்க…)