(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது.
The Formula
Political & Sociology Research
(புருஜோத்தமன் தங்கமயில்)
ராஜபக்ஷர்களுக்கு எதிராக, முழு நாடும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. ராஜபக்ஷர்கள் ஆட்சி அதிகாரத்தை விட்டு, வீட்டுக்கு செல்லும் வரை இந்தப் போர்க்கோலம் இன்னும் இன்னும் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக, கடந்த வாரம் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
(எம்.எஸ்.எம். ஐயூப்)
மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது.
(லக்ஸ்மன்)
மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 13
தமிழர்கள் மத்தியில், தரப்படுத்தல் ஓர் எதிர்வினையை உருவாக்கியதன் பின்னால், வலுவான காரணங்கள் இருந்தன. தரப்படுத்தல் வெறுமனே, 1970ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் விளைவு மட்டுமல்ல! இதற்கான, நீண்டகால சமூகக் காரணிகள் பலவுண்டு.