தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!

எழுபதுகளின் கால் பகுதியில் கொழும்பில் கல்லூரி படிப்பை தொடர்ந்த எனக்கு கிடைத்த சுதந்திரம் [ உறவினர் தொல்லையற்ற சுதந்திர வாழ்க்கை ] பல நண்பர்களின் உறவை பலப்படுத்திய போது, அறிமுகம் ஆனார் என்னுடன் கல்லூரி நாடக விழாக்களில் கலந்து எனது ‘’பைத்தியங்கள் பலவிதம்’’ எனும் நாடகத்தில் சைவ பைத்தியமாக நடித்த நவநீதன் நேமிநாதன். ஆம் அவர்தான் அன்றைய திருமலை பாராளுமன்ற உறுப்பினர் நேமினாதனின் ஒரே தவப்புதல்வன். என்னைவிட பல வயது இளையவன். அவன் என் வகுப்பு தோழன் அல்ல. உருவத்தில் மிக பருமனானவன். அன்று இளைஞர் பேரவை, ஈழவிடுதலை இயக்கம், ஈரோஸ், ஈ பி ஆர் எல் எப் என தன் பங்களிப்பை செய்த, இன்று அனைவராலும் மறக்கடிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும், ஒரு காலத்தில் கிளிவெட்டி தங்கத்துரை அண்ணனின் [ 1997ல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட திருமலை பாராளுமன்ற உறுப்பினர் ] வலதுகரமாக செயல்ப்பட்ட தங்கமகேந்திரன் அவர்களை, மட்டக்களப்பில் அடித்து ஒய்ந்த சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் சந்தித்த போது, நான் கேட்ட கேள்விக்கு அவர் நகைச்சுவையாக ஒரு பதில் கூறினார்.

(“தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..

ரூ. 570 கோடி விவகாரத்தில் சிபிஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குத்தான் பெரும் சிக்கல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவர்தான் ஸ்டேட் வங்கியின் பணம் இது என்று அடித்துக் கூறியுள்ளார். நாட்டின் முதன்மையான வங்கி இவ்வளவு பெரிய பணத்தை போலி பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற செயல் மிகப் பெரிய சந்தேகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கூறியுள்ள புதிய தகவல்களைப் பார்த்தால் மேலும் மேலும் சந்தேகங்கள் கூடியபடியே உள்ளன.
பதிவெண்ணை பரிசோதிக்காதது ஏன்?

(“விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..” தொடர்ந்து வாசிக்க…)

யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?

ஃப்ரான்சில் சென்ற 14 அன்று பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த பயக்கரவாதத் தாக்குதலில் (Nice attack) 84 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததை ஒட்டி இன்று அங்கு நெருக்கடி அறிவிக்கட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெறித்தனமாக ட்ரக்கை ஓட்டிக் கொலைகளைச் செய்த நபர் அபோதே சுட்டுக்கொல்லப்ப ட்டான். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்தான்.

(“யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 51 )

தம்பலகாத்தில் எங்கெங்கு நில ஆக்கிரமிப்பு நடக்கும் என்று கருதிய இடங்களில் தமிழர்கள் பலருக்கு காணிகள் வழங்கி குடியேற வழிவகுத்தார்.மக்கள் தொகை குறைவும் விருப்பமின்மையும் அதிக முன்னேற்றம் தரவில்லை .ஆனால் இவைகளே பின்னாட்களில் ஓரளவு இனப்பிரச்சினைகளில் இருந்து தம்பலகாமம் பாதுகாக்கப்பட்டது.இதை பலர் நன்றியுணர்வோடு சொல்லியுள்ளனர்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 51 )” தொடர்ந்து வாசிக்க…)

கண்டிய நடனம்தான் பிரச்சினையா?

(ப. தெய்வீகன்)

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன.  அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்று மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

(“கண்டிய நடனம்தான் பிரச்சினையா?” தொடர்ந்து வாசிக்க…)

இன்னோர் ஜுலை கலவரம்

ஒவ்வோர் கால கட்டத்திலும் இனக் கலவரங்கள் நடந்த பொழுதிலும்….வடமாகாணத்தில் பரம்பரையாக பேக்கரி நடாத்திய சிங்களவர் ஒருவரேனும் 1983க்குப் பின்புவாழ அனுமதிக்கப்படாத நிலையிலும் வடமாகாணத் தமிழர்கள் இலங்கை முழுக்க தமது அரச தொழிலையும் வர்த்தகத்தையும் நடாத்தி வந்தார்கள்.

(“இன்னோர் ஜுலை கலவரம்” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள். அம் மறதியின் விலை ஆட்சியதிகாரத்தையே அசைக்க வல்லது. நீதி, நியாயம், நட்பு என எல்லாவற்றையும் தாண்டி நிலைப்பதற்கான போராட்டம் முக்கியம் பெறுவதால், ‘நேற்று வரை அண்ணன் தம்பி, இன்று நீ யாரோ நான் யாரோ’ என்பதே உலக அரசியல் அரங்கில் தாரக மந்திரமாயுள்ளது.

(“துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 50 )

எனக்கு இரண்டு வயதில் பற்குணம் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்.இதன் காரணமாக நான் அவரோடு சேர்ந்து வாழ்ந்த நாட்கள் குறைவு. ஆனாலும் அவரே எனக்கு மிகப் பிடித்த அண்ணனாக இருந்தார்.நான் குழப்படி காரப் பிள்ளை.குழப்படியை நமது சமூகம் ஒழுக்கக் குறைவாகவே கருதியது.ஆனால் பற்குணம் அப்படியான குழந்தைகளை,சிறுவர்களை செயற்திறன் மிக்க பிள்ளைகளாகவே கருதினார்.எனவே அவர் என் குழப்படிகள் பற்றி கவலை கொள்ளவில்லை.மேலும் என்னைச் சீண்டி ஒருமையான வார்த்தைகளால் என்னிடம் பேச்சு வாங்குவார்.இதுவும் என்னையும் அவரையும் நன்கு இணைக்க காரணமானது எனலாம்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 50 )” தொடர்ந்து வாசிக்க…)

விற்றுப் பிழைத்தல்

(முகம்மது தம்பி மரைக்கார்)

முஸ்லிம் சமூகம் தமக்கென்று ஓர் அரசியல் கட்சியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்தக் கட்சியானது, தமக்காகக் குரல் கொடுக்கும் என்று அந்தச் சமூகம் அப்பாவித்தனமாக நம்புகிறது. இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் – ஆசைப்பட்டதை விடவும் அதிகமாகவே, அவர்களுக்குள் அரசியல் கட்சிகள் உருவாகி விட்டன. இருந்தபோதும், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை – ஜனநாயக வழியில் போராடிப் பெற்றுக் கொள்வதற்கென்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தமது மக்களின் நலன்களை விற்றுப் பிழைத்து, வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

(“விற்றுப் பிழைத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 49 )

முன்னாள் அமைச்சர் மஜீத் கிண்ணியாவுக்கு அதிகமான சேவைகள் செய்தவர்.மித மிஞ்சின விளம்பரப் பிரியர்.இவர் காலத்தில் கிண்ணியா மகா வித்தியாலயம் வளரச்சி பெற்றது.புதிய டி.ஆர.ஒ அலுவலகம் கட்டினார் .சில முட்டாள்தனமான சேவைகளும் செய்தார்.

திருகோணமலையில் இருந்து கண்டி வீதி வழியாக செல்லும் அனைத்து நீண்ட தூர பஸ்கள் யாவும் தம்பலகாமம் வழியாக கிண்ணியா வந்தே போகவேண்டும்.இது கண்டி வீதியில் இருந்து உள்ளே பத்து மைல்வரை தம்பலகாமம் ஊடாக சென்று அதே வழியாக திரும்பி கண்டி வீதிக்கு வந்து செல்ல வேண்டும்.இது நீண்ட தூர பிரயாணிகளுக்கு மன உளைச்சல் கொடுக்கும் விசயம்.ஆனால் மஜீத் இதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.தான் நினைத்த படி நடக்கவேண்டும்.இதுவே அவரின் பலவீனம்.

இதை சொல்வதற்காக பற்குணத்தின் அலுவலகம் வந்தார்.அப்போது பற்குணம் ஏன் சேர் கிண்ணியாவுக்கு பாலம் போட்டால் இந்த அலைச்சல் இல்லையே எனக் கேட்டார். அதற்கு மஜீத் என்னால் பாலம் போட முடியும்.அப்படிப் போட்டால் சிங்கள மக்கள் கிண்ணியாவிலும் அதை அண்மித்த பகுதிகளிலும் குடியேறுவதை என்னால் தடுக்க முடியாது.ஏற்கனவே விமானப்படை,கடற்படைத் தளங்கள் உள்ளன.எனவே இலகுவில் குடியேறிவிடுவார்கள்.ஆகவேதான் நான் பாலம் அமைப்பதை விரும்பவில்லை என்றார்.

மஜீத்தைப் பொறுத்தவரை அவரின் சேவையை மதித்த பற்குணம் அவரின் அடாவடித்தனங்களையே வெறுத்தார்.இதன் காரணமாக மகறூப் அவர்களை தேர்தலில் போட்டியிட தூண்டியவரகளில் பற்குணமும் ஒருவர்.

மஜீத் பற்றிய உண்மையான நகைச்சுவை கதை இது

அவர் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்தவர்.ஒரு தடவை அவரது பிரதானமைச்சர் மூன்று நாள் வெளிநாடு பயணம் சென்றார். அதனால் அந்த மூன்று நாட்களும் இவர் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்காக கிண்ணியாவில் சிலர் பாராட்டு விழா எடுத்தார்கள்.இதைத் தொடர்ந்து பலரும் விழா எடுத்தார்கள். ஆனால் மூன்று நாட்களில் அந்த அமைச்சர் நாடு திரும்பிவிட்டார். பாராட்டு விழாக்களோ வருடங்களாக தொடர்ந்தது.

முட்டாள்தனமாக அந்த மக்களால் எடுக்கப்பட்ட அந்த பாராட்டு விழாக்களில் மஜீத் அவர்களும் கலந்துகொண்டார் .இது எப்படி

(Vijaya Baskaran)