பிரபாகரனின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கத்தின் மூன்றாம் தர பேச்சு

ஆனால் இதுவரை சீரியஸ் ஆக வாசித்தோருக்கு ஒரு நகைச்சுவையுடன் ” தத்துவ வித்தகர்” (நன்றி : மூலம் ஹக்கீம் ) அன்டன் பாலசிங்கம் இலண்டனில் நடந்த மாவீரர் தின நிகழ்சியொன்றிலே கரகோசத்துக்கு மத்தியில் அவருக்கும் பிரபாகரனுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.

(“பிரபாகரனின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கத்தின் மூன்றாம் தர பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார்

யாழ் மைய வாதிகளின் தமிழ் இனவாதிகளின் -தமிழ் தேசிய வாதிகளின்- எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை இஸ்லாமிய சோசலிஸ முன்னணியின் யாழ் அங்குரார்ப்பன கூட்டத்தை நடத்த துணை புரிந்தவர்கள் சிறுபான்மை தமிழர்களும் இடதுசாரிகளுமாவார்கள். அவர்களில் பலர் கடாபியின் இலங்கை வருகையை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அன்று நிலவிய சிறுபாண்மை தமிழர்கள் குறுகிய தமிழ் இனவாதத்துக்கும தேசிய வாதத்துக்கும் அப்பால் மிக துணிகரமாக தேசிய சர்வதேச அரசியல் கருத்தாடல்களை ஊக்குவித்தவர்கள் அதன் மூலம் ஒரு முற்போக்கு அரசியல் களம் சமைத்தவர்கள். அவர்களில் எம்.சி சுப்பிரமணியம் பதியுதீனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார். அது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

(“கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘தன் கையே தனக்குதவி’ என்பது பழமொழி. இதன் நிகழ்நிலை உதாரணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். உதவி என்ற பெயரில் உவத்திரவம் செய்வது உலக அரசியல் அரங்கில் நிறைய உண்டு. உதவிகள் பல்வேறு பெயர்களில் நடந்தேறி முடிவில் புதிய ஆதிக்க வடிவங்களாக நிலைபெறுகின்றன. பாதுகாப்பின் பெயரால் அழைத்தவர்களாலேயே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமற் போன அவலம் இங்கும் நடந்தது. அந்நிய உதவியைக் கூவி அழைப்பவர்கள் மனங்கொள்ள வேண்டிய விடயமிது.

(“அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )

பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )” தொடர்ந்து வாசிக்க…)

‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்

(மேனகா மூக்காண்டி)

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை – உடை – பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்நேரமும் கருத்திற்கொண்டிருத்தல் வேண்டும்.

(“‘ஒருத்தனுக்கு ஒருத்தி’: பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

சி.வியும் சிங்கள மொழியும்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

(“சி.வியும் சிங்கள மொழியும்” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவின் நன்நீர் அதுவும் இலவசமாக கிடைக்கும் தாகத்து நீர்

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை.

(“கேரளாவின் நன்நீர் அதுவும் இலவசமாக கிடைக்கும் தாகத்து நீர்” தொடர்ந்து வாசிக்க…)

அஷரப் உம் பிரேமதாஸாவும்

பிரேமதாசாவை கொண்டே புலிகள் பிடித்து வைத்திருந்த தமது கட்சி ஆதரவாளர்களை கூட புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையே நிலவிய தேன்நிலவு காலத்தில் முஸ்லிம் காங்கிரசால் விடுவிக்க முடிந்த நேரம். புலி -பிரேமா தேனிலவு முறிந்த காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் கூட புலிகளின் கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பிரேமதாசாவால் கைவிடப்பட்ட நேரம் , ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் ஆட்கொண்டிருந்த காலத்தில் அஸ்ரப் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து மட்டுமல்ல பின்னர் அவர்களின் கட்சி மாநாட்டு சுவரொட்டிகளிலும் அஸ்ரபின் புகைப்படத்துக்கு பக்கத்தில் பிரேமதாசாவின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு பிரசுரிக்கவும் தீர்மானம் எடுக்குமளவு கட்சி பிரேமதாசாவின் புகழ் பாடுபவர்களாகவும் அவரை குஷிப்படுத்துபர்களாகவும் இருந்துள்ளனர்.

(Bazeer Seyed)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )

தம்பலகாமம் உதவி அரசாங்க அலுவலகம்,தம்பலகாமம் சந்தியில் உள்ளது.இதன் பின்னால் பற்குணத்தின் அரச வீடு இருந்தது. இதனைச் சுற்றி சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.தமிழர்கள் அதில் இருந்து இரண்டு மைல் உள்ளேயே இருந்தனர்.சந்தியை அண்மித்து ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருந்தன.சந்தியைப் பொறுத்தவரை அது ஒரு சிங்கள கிராமம் போலவே இருந்தது.ஏறக்குறைய இருபது குடும்பங்கள் இருக்கலாம்.அதனை அண்மித்து விகாரை ஒன்றும் இருந்தது.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )” தொடர்ந்து வாசிக்க…)

ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…

ஒரு 40 நபர்கள் சேரும், ஞாயிற்றுக்கிழமை என்ன மாறுதல்கள் கொண்டு வரும்? வயல்வெளிகள் நிறைந்த கிராமத்தில், கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமையும் தன்னார்வலர்கள் இணைந்து, குளம் பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றோம்.

(“ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…” தொடர்ந்து வாசிக்க…)