பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 37 )

பற்குணத்தின் திருமணம் உறுதிசெய்யப்பட்டது .இது எங்கள் பெரிய அண்ணனுக்கு ஏமாற்றமாக இருந்தது.அவர் சீதனம் வாங்கி செய்துவைக்கவே விரும்பினார்.பற்குணம் சீதனத்தை அறவே நிராகரித்தார் . நாங்கள் இவ்வளவு காலமும் மண்குடிசையில் இருந்ததால் வீடு ஒன்றை கட்டும் முயற்சி எடுக்கப்பட்டது.அதே நேரம் பற்குணம் தன் படிப்புக்காக வாங்கப்பட்ட கடன்களை திருமணத்தின் முன்பாக அடைக்க விரும்பினார்.இதில் பெரிய கடன்களாகும் ருபா 2000,2000 ஆக இருவரது கடன்கள் இருந்தன. ஒன்று உறவினர்கள் எங்கள் காணியை அடமானமாகப் பெற்றுத்தந்த பணம்.அவரகளிடம் இதுபற்றிக் கேட்டபோது வட்டியும் முதலுமாக 4800 தரும்படி கூறினார்கள்.இது காணியின் பெறுமதியைவிட கூடியதுதான்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 37 )” தொடர்ந்து வாசிக்க…)

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்

உண்மை பேசினால் உயர முடியாது என்று உணர்ந்த பின்பும் பொய்யை விலைபேசி விற்பவருக்குத் தான் பதவியும் அதிகாரமும் வந்து சேரும் என்பதை அறிந்த பின்பும் நேர்மையாக நடப்பதன் மூலம் எந்த மேலான மாற்றத்தையும் பொதுவாழ்வில் கொண்டு சேர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அரசியல் உலகத்தில் நீடிப்பது அர்த்தமற்றது என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

(“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ(பகுதி 36)

பற்குணம் பதவியேற்றபோது அவருக்கு சாரதியாக அப்புஹாமி என்பவர் இருந்தார்.இவர் பிறப்பால் இஸ்லாமியர். சிங்கள குடும்பம் ஒன்று வளர்த்ததால் பௌத்தரானார்.அவரை சாம்பசிவ ஐயர் விரும்பியதால் கருணதாஸ என்கிற பெரியவர் சாரதியாக வந்தார்.அவர் சில காலங்களில் ஓய்வு பெற விமலசேன என்பவர் வந்தார்.இவர் கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவர்.இதனால் எந்த அதிகாரிகளுக்கும் பிடிப்பதில்லை.பலர் இவருக்குப் பயந்தனர்.ஆனால் பற்குணத்துடன் மிகவும் மரியாதையாகவே நடந்தார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ(பகுதி 36)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பதிவு 35)

நான் அம்மாவோடு படுப்பவன்.நித்திரை வரும்வரை பற்குணத்தோடு படுப்பேன்.அப்போது அவர் அறையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. அது யார் எனக் கேட்டேன். இதுதான் பெரிய அண்ணி மாதிரி உனக்கு சின்ன அண்ணி என்றார்.எனக்குப் புரியவே இல்லை. மறுநாள் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா எதுவும் சொல்லவில்லை .

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பதிவு 35)” தொடர்ந்து வாசிக்க…)

சொன்னதைச் செய்யாத இடதுசாரிகள்

(க. திருநாவுக்கரசு)
கொள்கைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் கட்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிகை கிண்டல் செய்தது. இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து அந்தக் கட்சியும் வெளியே வந்துவிட்டது. மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து தேசியக் கட்சியான காங்கிரசை பலவீனப்படுத்துவது பொதுவாக, மார்க்ஸிஸ்ட்களின் அரசியல் உத்தி. இன்று திரிணமூல் கட்சியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கைகோர்க்கும் அவலமாய் அது தலைகீழாகியிருக்கிறது. 1930-களில் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக இயங்க முடியாமல் காங்கிரசுக்குள்ளிருந்து செயல்பட்டார்கள். அதோடு ஒப்பிட்டால் ஒரு வகையில் முழுச் சுற்று சுற்றிவந்திருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

(“சொன்னதைச் செய்யாத இடதுசாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல.

(சட்டத்தரணி இ.தம்பையா)

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் ஒன்றினால் தீர்மானிக்கப்படுகின்றமையினால் 2016ஆம் ஆண்டு 4ஆம் இலக்க வரவுசெலவு நிவாரண கொடுப்பனவுச் சட்டம் ஏற்பாடு செய்துள்ள கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் அல்ல. அதனை நிவாரண கொடுப்பனவுச் சட்டமே வெளிப்படையாக கூறியுள்ளது. அப்படியே அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு சம்பளத்தை உயர்த்த கம்பனிகள் சுய விருப்பின் பேரில் இணங்கினாலும் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 60/= கொடுப்பனவை மாத்திரமே பெறமுடியும். நாட் சம்பளத்தைப் பெறுபவர்கள் ஒருநாளைக்கு ரூபா 100 வீதம் அதாவது மாதம் ரூபா 2500 வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கும் ஏற்பாடுகள் அச்சட்டத்தில் கிடையாது. நாட் சம்பளம் பெறுபவர்களுக்கு மாதமொன்றுக்கு அதிகபட்சமாக ரூபா. 1600 மேல் வழங்க முடியாது என அச்சட்டம் விதித்துள்ளது. எனினும் அச்சட்டத்தை ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் அமைச்சர்கள் அச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு 100/=சம்பள உயர்வை பெற மக்களைப் போராட அழைப்பது வேடிக்கையானது. கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதில் உள்ள தாமதம், ரூபா 2500 சம்பள உயர்வை வேண்டி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மக்களுக்கு அழைத்து விடுத்திருப்பது என்பன தொடர்பில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமாகிய இ. தம்பையா எமக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்தநேர்காணலின் சுருக்கம்:

(“தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு

(மொஹமட் பாதுஷா)

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பெரும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகள் பற்றியும் அரசியல் சார்ந்த அபிலாஷைகளின் நிலைப்பாடு குறித்தும் பேச வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் பற்றியே இக்கட்டுரை அதிக கவனம் செலுத்துகின்றது என்றாலும், இதிலுள்ள பல விடயங்கள் தமிழர்களுக்கும் பொதுவானவையாகும். ‘வழிபடுதலால்’ அவர்கள் வேறுபட்டாலும் வாழ்வியலில் இவ்விரு சமூகங்களினதும் பொதுவிதியாக இவ்விடயங்கள் காணப்படுகின்றன.

(“வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ்: மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பல சமயம், எதிர்பார்த்தவற்றை விட எதிர்பாராதவை சுவையானவை. எல்லாரும் எதிர்பார்க்கிறோம். நிறைவேறாத எதிர்பார்ப்பு ஒருபுறம் ஏமாற்றமாகவும் மறுபுறம் விரக்தியாகவோ, கோபமாகவோ வெளிப்படலாம். மக்களின் தீர்ப்புக்கள் பலசமயம் இவ்வாறானவையே. சிலவேளை, மக்களின் தீர்ப்புக்கள் புதிராகத் தோன்றலாம். அவற்றுட் தர்க்கத்தையோ, நியாயத்தையோ தேட இயலாமற் போகலாம். அதனால் தானோ என்னவோ, மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பென்கிறார்கள்.

(“பிலிப்பைன்ஸ்: மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புலம் பெயர் தேசத்தவரின் தமிழ் நாட்டுத் தேர்தல் பார்வை

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார் என்று நினைத்திருந்த ஒருவரை அமெரிக்காவில் சந்தித்தேன். திருச்சியிலிருந்து வந்தவர்.
“இந்தியாவிற்கு எப்போது வந்தீர்கள்” என்று கேட்டேன்
. “ மூன்று வருடமாச்சு?” என்றார்.

(“புலம் பெயர் தேசத்தவரின் தமிழ் நாட்டுத் தேர்தல் பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 34)

குச்சவெளி பற்குணத்துக்கு பிடித்த பிரதேசமாக இருந்த்து.ஆனால் இங்குள்ள போக்குவரத்து வசதியீனங்கள் அதுவும் மழைகாலங்களில் தடைப்படும்.சலப்பை ஆறு,புடவைக்கட்டு,யான் ஓயா ஆகியவை வெள்ளம் பெருக்கெடுத்தால் தொடர்புகள் துண்டிக்கப்படும்.இதன் காரணமாக புல்மோட்டை மக்கள் தமது பகுதிகளை அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்க கோரிக்கை வைத்தனர்.அவரகள் காரணங்கள் நியாயமானவை.ஆனால் சிலர் தமிழ் பிரதேச நிரவாகத்தைவிட சிங்கள பிரதேசத்துடன் இணைவது இலாபம் என்றும் கருதினர்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 34)” தொடர்ந்து வாசிக்க…)