70களில் சபிக்கப்பட்ட சிறிமாவின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சி!

(என்.சரவணன்)

‘பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை விவசாய நிலங்களாக்குவதே எமது அரசாங்கத்தின் இலக்கு’

என்று சொன்னவர் சிறிமா. பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க 1974ஆம் ஆண்டு ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வேளை ஒரு புறம் அவருக்கு எதிரான பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதே வேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவுக்காக வந்திருந்த சிறிமாவின் பேச்சில் இருந்த தேசிய விவகாரங்கள் கவனிக்கத்தக்கவை.

எனது பார்வையில் ‘கோல் பேஸ்’ போராட்டமும் – இடைக்கால தீர்வு பொறிமுறையும்!

(Ramachandran Sanath)

‘கோல் பேஸ்’ வருவார்கள், கொடிகளைத் தூக்கிப்பிடித்து, ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷம் எழுப்புவார்கள், ஓயமாட்டோமென சூளுரைப்பார்கள், ‘செல்பி’ எடுத்து மகிழ்வார்கள், படங்களை வலைத்தளங்களில் பதவிவேற்றம் செய்து பரவசம் அடைவார்கள், பொழுது சாய்ந்ததும் சென்றுவிடுவார்கள், நாமோ வென்றுவிடலாம்.

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம்

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும். 

மகிந்தவின் பேச்சின் சாரம்சம்.

யுத்த வெற்றி பற்றிய தம்பட்டம் மட்டுமே. தம்மால் சுவீகரிக்கப்பட்ட அரச சொத்து பற்றியோ ஒவ்வொரு அபிவிருத்தி என்ற பெயரில் அனுமானிக்கப்பட்ட திட்டங்களில் கபளீகரம் செய்யப்பட்ட சொத்துக்கள் பற்றிய சுயவிமர்சனம் எங்கே? பாராளுமன்ற அரசியலை காப்பாற்றி தனது குடும்ப ஜனநாயகத்தினை காப்பாற்ற போகின்றாராம்.

கோட்டாவின் விடாப்பிடி கொடாப்பிடி

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது.

இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களுடன் காலம் கழித்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போர்க்கோலம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, முழு நாடும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரத்தை விட்டு, வீட்டுக்கு செல்லும் வரை இந்தப் போர்க்கோலம் இன்னும் இன்னும் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக, கடந்த வாரம் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது.

இலங்கை நிலவரம்: என்ன செய்ய வேண்டும்.

(சாகரன்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலும் அதனைத் தொடர்ந்த பொருட்களின் தட்டுபாடு விலைவாசி ஏற்றம் என்பதுவும் அதனைத் தொடர்ந்து இலங்கை அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்த மக்கள் தெருவில் இறங்கி போராடும் நிலமைகளும் நாம் யாவரும் கணத்திற்கு கணம் காணும் காட்சிகள்.

‘பழைய மொந்தையில் புதிய கள்’

(மொஹமட் பாதுஷா)

பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையின் ஆட்சியாளர்கள், மக்கள் எதிர்பார்த்து இருந்ததும் ஆனால், இலகுவில் நடக்கும் என நம்பியிராததுமான ஒரு திருப்புமுனையில் வந்துநிற்கின்றார்கள்.